பஹ்ரைனில் மரக்கன்றுகள் நடும் சிறப்பு பிரச்சாரம்:

பஹ்ரைனில் மரக்கன்றுகள் நடும் சிறப்பு பிரச்சாரம்:

பஹ்ரைன் தெற்கு முனிசிபாலிட்டியின் அனுசரணையில், 'கிளீன் அப் பஹ்ரைன்' குழுவினர் மரக்கன்றுகள் நடும் சிறப்பு பிரச்சாரத்தை ஏற்பாடு செய்தனர். அக்டோபர் 19, சனிக்கிழமை மாலை மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெற்ற நிகழ்ச்சியை தெற்கு பேரூராட்சி தலைவர் அப்துல்லா இப்ராகிம் அப்துல் லத்தீப் துவக்கி வைத்தார். பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கிளீன் அப் பஹ்ரைனில் இருந்து சுமார் 50 தன்னார்வலர்கள் ரிஃபா பகுதியிலுள்ள அல் எஸ்திக்லால் நடைபாதையில் சுமார் 200 மரக்கன்றுகள் நட்டனர்.

பஹ்ரைனில் பல சமூக செயல்பாடுகளை செய்து வரும் லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ்(சமூக உதவி இயக்கம்)நிறுவனர் சையத் ஹனீஃப் தலைமையிலான குழுவும் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டனர். இத்தகைய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தெற்கு நகராட்சிக்கு லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ் வாழ்த்துகள் தெரிவித்தனர். பிரச்சாரத்திற்குப் பிறகு, அனைத்து தன்னார்வலர்களுக்கும் அவர்களின் சமூகப் பொறுப்பைப் பாராட்டி மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

Tags

Next Story