நாமக்கல்லில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் இரண்டாவது மாவட்ட மாநாடு நடைபெற்றது.
Namakkal King 24x7 |8 Dec 2024 8:34 PM IST
இந்த மாநாட்டில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
108 ஆம்புலன்ஸ் தொழிற்சங்கத்தின் சி ஓ ஐ டி யு மாநாடு, நாமக்கல் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் கோவை மண்டல மாநில செயலாளர் சிவக்குமார் முன்னிலையில் மாநில பொதுச்செயலாளர் செயலாளர் இராஜேந்திரன் கொடியேற்றத்துடன் நடைபெற்றது.இந்த மாநாட்டில்108 ஆம்புலன்ஸ் சேவை சட்டத்தில் பணிபுரிகின்ற தொழிலாளர்கள் சக மனிதனாக சமுதாயத்தில் வாழ்வதற்கான உரிமைகளை அரசு வழங்க வேண்டும்.இ.எம்.ஆர்.ஐ நிர்வாகத்தில் செயல்பாடுகளை மக்களிடம் அமைப்பு ரீதியாகவும்,சட்ட ரீதியாகவும் அம்பலப்படுத்துவது எனவும் சட்ட விரோத செயல்களை கண்டு கொள்ளாமல் பொதுமக்கள் வரிப்பணத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் இ.எம்.ஆர்.ஐ தனியார் நிறுவனத்தினை பாதுகாக்கவும் அரசு அதிகாரிகளையும் அம்பலப்படுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் தனியார் மருத்துவ ஆயுள் காப்பீட்டுக்கு வரும் பெருந்தொகையினை ஒதுக்கீடு செய்து தரமான மருத்துவத்தில் தனியார் மருத்துவமனைகளில் பெற்றுக் கொள்ள பொது மக்களை நெருக்கடிக்கு ஆளாகுவதை கைவிட்டு அரசு மருத்துவமனையில் உரிய வகையில் தரமாக பாதுகாக்க வேண்டும். உள்ளிட்ட ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்த மாவட்ட மாநாட்டில் பத்து ரூபாய் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் விசுவராஜ், விவசாய முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன்,சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுனர்கள் சங்கத்தின் மாநில தலைவர் பத்மராஜ், அரசு ஊழியர்கள் சங்கம் மாவட்ட செயலாளர் முருகேசன், உழைப்பாளர் கலைக்கூடம் மாநில ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், பகவத்சிங் மாணவர் இளைஞர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் குமரேசன், ஆயுஸ் பல்நோக்கு பணியாளர் சங்கம் பழனிச்சாமி, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச் சங்கம் ஸ்ரீதர் ஆகியோர் மாநாட்டிற்கு வாழ்த்துரை வழங்கினார்கள், கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பார்ட்டி மாநில ஒருங்கிணைப்பாளர் கதிரேசன்,108 ஆம்புலன்ஸ் தொழிற்சங்கத்தின் மாநில பொருளாளர் சாமிவேல், மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன் சிறப்புரை ஆற்றினர்.
Next Story