- Home
- /
- ஷாட்ஸ்

அரக்கோணம் அருகே கார், டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். விபத்தில் காரில் பயணம் செய்த வெங்கடேசன் அவரது மனைவி லதா. தினேஷ் ஆகியோர் உயிரிழந்தனர். விபத்து நடந்தவுடன், மீட்பு பணிகள் தொடங்கப்பட்டு, இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவிட்டுள்ளார். பெருந்தலைவர் காமராசரைப் ‘பச்சைத்தமிழர்’ என்று போற்றியவர் தந்தை பெரியார். குடியாத்தம் இடைத்தேர்தலில் பெருந்தலைவர்க்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என முடிவெடுத்தவர் பேரறிஞர் அண்ணா. சமூகநீதியையும் மதச்சார்பற்ற நல்லிணக்கத்தையும் உருவாக்க வாழ்நாளெல்லாம் உழைத்த பெருந்தலைவரின் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம்! வீண் விவாதங்களைத் தவிர்ப்போம்!

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடக்கும்போது ஆதார், ரேஷன் அட்டையை ஆவணமாக ஏற்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்தில் திமுக மனு அளித்துள்ளது. தேர்தல் தொடர்பான விதிகளை இந்தி, ஆங்கிலத்தில் வெளியிடுவதை போல தமிழிழும் வழங்க வேண்டும். வாக்குச்சாவடிகளில் ஒத்துழைப்பு வழங்காத அதிகாரிகள் நிலை குறித்த சூழலையும் சரி செய்ய வேண்டும்.

கூட்டணி ஆட்சி என்று மூன்று முறை அமித்ஷா தெளிவுப்படுத்தி விட்டார். இதில் மாற்றுக் கருத்து இருந்தால், அமித்ஷாவிடம் அதிமுக பேசலாம் என அண்ணாமலை பேட்டியளித்துள்ளார். என் கட்சித் தலைவர் அமித்ஷா ‘கூட்டணி ஆட்சி’ என பேசிய பின்பும், நான் அதைத் தூக்கிப் பிடிக்கவில்லை என்றால் எதற்கு தொண்டனாக இருக்க வேண்டும்? என கூறினார்.

மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்க உள்ள கமல்ஹாசனுக்கு பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து கொடுத்து திருமாவளவன் நேரில் வாழ்த்து தெரிவித்தார். திமுகவை எதிர்ப்பவர்கள் இன்னும் கூட்டணி வடிவத்தையே பெறவில்லை. திமுக தலைமையில் ஒரு கூட்டணி வலுவாக உள்ளது; திமுகவை எதிர்க்கும் சக்திகள் சிதறிக்கிடக்கின்றன. தேர்தல் தொடர்பான விதிகளை இந்தி, ஆங்கிலத்தில் வெளியிடுவதை போல தமிழிழும் வழங்க வேண்டும். தேசிய அளவில் இணைந்து செயல்பட வேண்டிய தேவை குறித்து கமல்ஹாசனிடம் பேசினேன் என வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறினார்.

காவி உடை போர்த்தப்பட்ட திருவள்ளுவர் சித்திரம் போல், இல்லாத பாடலை ‘குறள்’ என்று பரப்புவது திருவள்ளுவரை அவமதிக்கும் ஒரு மன்னிக்க முடியாத செயல் என்று காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். போலிச் சித்திரம், போலிக் குறள், இந்தப் போக்கு எங்கு கொண்டு செல்லும்? என்று ஆளுநர் அளித்த விருதில் திருக்குறள் சர்ச்சையானது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

அதிமுக கூட்டணியில் தற்போது பாமக இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணிக்கு பாமக வந்தாலும் வரலாம் என்றுதான் கூறினேன். அதிமுக கூட்டணிக்கு பாமக வந்தால் அதன்பிறகு ஆட்சியில் பங்கு குறித்து கேளுங்கள். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற அன்புமணி கேள்விக்கு நேரடியாக பதில் தர எடப்பாடி மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டை ஆளும் அரசில் பாமகவும் பங்கேற்க வேண்டும் என்று அன்புமணி கூறியிருந்தார்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 19,760 கன அடியில் இருந்து 17,845 கன அடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.66 அடி; நீர் இருப்பு 92.93 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 18,500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் வழியாக 500 கனஅடி நீர் வெளியேற்றம்.