ரூ.10 லட்சத்திற்குள் 3 கார்கள் விரைவில் அறிமுகம் !! புக் பண்ண ரெடியா இருங்கா...

ரூ.10 லட்சத்திற்குள் 3 கார்கள் விரைவில் அறிமுகம் !! புக் பண்ண ரெடியா இருங்கா...
X

ஆட்டோ மொபைல்


பண்டிகை காலங்களை முன்னிட்டு இந்திய சந்தையில் அடுத்ததாக ரூ.10 லட்சத்திற்குள் 3 கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளன.


ஹோண்டா அமேஸ் - மாருதி சுஸுகி டிசைர் காருக்கு விற்பனையில் போட்டியாக விளங்கும் அமேஸ் காரும் விரைவில் நியூ ஜென்ரேஷனுக்கு அப்கிரேட் செய்யப்பட உள்ளது. காரில் புதிய வசதிகள் வழங்கப்படும். மற்றப்படி, அமேஸ் காரின் என்ஜின் & கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் இருக்காது.



மாருதி சுஸுகி டிசைர் - மாருதி சுஸுகியின் காம்பெக்ட்டான செடான் ரக காராக விளங்கும் டிசைர் அதன் நியூ ஜென்ரேஷனில் புதுமையான வெளிப்பக்கம் மற்றும் உட்பக்கத்துடன் முற்றிலும் புதிய தோற்றத்தை பெற்றுவர உள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நியூ ஜென்ரேஷன் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் இருந்து நிறைய விஷயங்கள் புதிய டிசைர் காரிலும் வழங்கப்படும்.


மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ இவி - புதிய எலக்ட்ரிக் வெர்சன் தான் எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ இவி ஆகும். இந்த எலக்ட்ரிக் கார் 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படலாம். மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் காரில் வழங்கப்படும் அதே சிறிய அளவிலான பேட்டரி பேக் இந்த புதிய எலக்ட்ரிக் காரிலும் கொடுக்கப்படலாம். சிங்கிள்-சார்ஜில் அதிகப்பட்சமாக 400கிமீ தொலைவிற்கு இயங்கக்கூடியதாக இந்த பேட்டரி இருக்கும்.




Tags

Next Story