ரூ.1.4 லட்சம் குறைந்த விலையில் 7 சீட்டர் மாடல் - ஹைப்ரிட் ஆப்ஷன் கார்

ஆட்டோமொபைல்ஸ்
Maruti Invicto Discount: மாருதியின் 7 சீட்டர் கார் மாடலான இன்விக்டோவிற்கு எக்சேஞ்ச் ஆஃபர் மற்றும் டிஸ்கவுண்ட் போன்ற சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாருதி இன்விக்டோ தள்ளுபடி, சலுகைகள்:
நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள தரமான கார்கள் என்பது மிகவும் அவசியமானது. நீங்கள் மாருதி நிறுவனத்தின் ரசிகராக இருந்து, பெரிய குடும்பத்திற்கு ஏற்ற புதிய காரையும் வாங்க விருப்பம் கொண்டிருந்தால், உங்களுக்கான சரியான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆம், மாருதியின் இன்விக்டோ தான் அந்த அபார சலுகை மற்றும் தள்ளுபடிகளை பெற்றுள்ளது. அதுவும் ரூ.1.4 லட்சம் வரை விலைக்குறைப்பு பெற்றுள்ள இந்த காரின் முழு விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. டொயோட்டா ஹைகிராஸின் மறு உருவமாகவே இன்விக்டோ உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.சர் நெந்ச்
மாருதி இன்விக்டோ - டிஸ்கவுண்ட் கூப்பன்:
டிஸ்கவுண்ட் கூப்பன் குறித்து பேசுகையில், மாருதி நிறுவனம் மொத்தமாக ரூ.1.4 லட்சம் வரை சலுகைகளை அறிவித்துள்ளது. இதில் பண தள்ளுபடி, எக்சேஞ்ச் டிஸ்கவுண்ட் அல்லது போனஸ் டிஸ்கவுண்ட் ஆகியவை அடங்கும். அதன்படி, தள்ளுபடியாக ரூ.25 ஆயிரமும், ஸ்க்ரேப்பேஜ் டிஸ்கவுண்ட் ரூ.1.15 லட்சம் மற்றும் எக்சேஞ்ச் டிஸ்கவுண்ட் ரூ.1 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதோடு, ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்ட வேரியண்டிற்கு ரூ.1.15 லட்சம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. தினசரி பயன்பாட்டிற்கும், நீண்ட தூர பயணத்திற்கும் ஏற்ற காரை, இந்த சலுகைகளை பயன்படுத்தி வாங்கி பொதுமக்கள் பயன் பெறலாம்.
மாருதி இன்விக்டோ இன்ஜின்:
மாருதி இன்விக்டோவில் 2.0 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 5200rpm-ல் 150 bhp ஆற்றல் மற்றும் 188Nm இழுவை சக்தியை உற்பத்தி செய்யக்கூடிய திறன் கொண்டுள்ளது. இது லிட்டருக்கு 23 கிமீ வரை மைலேஜ் வழங்கும் என மாருதி நிறுவனம் குறிப்பிடுகிறது.
இதர வசதிகள்:
மிகுந்த இடவசதியை கொண்டுள்ள இன்விக்டோ, இரண்டு டிஜிட்டல் டிஸ்பிளேக்களை பெற்றுள்ளது. அழகான டேஷ்போர்ட், வெண்டிலேடட் 7 சீட்ஸ், ஏர் கண்டிஷனர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், ஆண்டி லாக் பிரேக்ஸ் ஆகியவற்றுடன் சிறந்த தலை மற்றும் கால்களுக்கான இடவசதியையயும் கொண்டுள்ளது. 360 டிகிரி கேமரா, 6 ஏர் பேக்குகள், ஆடோ ஹோல்டுடன் கூடிய எலெக்ட்ர்டானிக் பார்கிங் பிரேக், எல்இடி லைட்டிங், 17 இன்ச் அலாய் வீல்கள், ஃபேப்ரிக் சீட்ஸ், பவர்ட் டெயில்கேட், பேடல் ஷிஃப்டர்ஸ் என பல்வேறு அம்சங்களும் நிறைந்துள்ளன.
விலை விவரங்கள்:
மாருதி இன்விக்டோவின் விலை ரூ.25.51 லட்சத்திலிருந்து ரூ.29.22 லட்சம் வரை நீள்கிறது. இன்விக்டோவில் மொத்தம் ஜீட்டா பிளஸ் 7 சீட்டர், ஜீட்டா பிளஸ் 8 சீட்டர் மற்றும் ஆல்ஃபா பிளஸ் 7 சீட்டர் என மூன்று வேரியண்ட்கள் உள்ளன. நெக்ஸா ப்ளூ, ஸ்டெல்லர் ப்ரோன்ஸ், மெஜெஸ்டிக் சில்வர் மற்றும் மிஸ்டிக் ஒயிட் என நான்கு வண்ண விருப்பங்களில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது.