ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் கார் !!

ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் கார் !!
X

அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் கார்

ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் அதன் புதிய அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் காரை இந்திய சந்தையில் ரூ.14.99 லட்சம் என எக்ஸ் ஷோரூம் அறிமுகம் செய்துள்ளது.

அல்கஸார் என்பது ஹூண்டாய் நிறுவனத்தின் பிரீமியம் 6/7-சீட்டர் எஸ்யூவி ஆகும். அதாவது 6 மற்றும் 7 பேர் பயணிக்கக்கூடிய இருக்கை அமைப்புகள் வழங்கப்படுகிறது.

ஹூண்டாய் அல்கஸார் 2024 காரானது எக்ஸிகியூட்டிவ், ப்ரெஸ்டீஜ், பிளாட்டினம் மற்றும் சிக்னேச்சர் ஆகிய நான்கு வகைகளில் கிடைக்கின்றன. புதிய அல்கஸாரின் ஃபேஸ்லிப்ட் மாடலின் பெட்ரோல் வேரியன்டானது ரூ.14.99 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும், டீசல் வேரியன்டானது ரூ.15.99 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும் கிடைக்கிறது.

புதிய ஹூண்டாய் அல்கஸார் எல்லா வகையிலும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது. புதிய டார்க் குரோம் ரேடியேட்டர் கிரில், குவாட் பீம் எல்இடி ஹெட்லேம்ப் தொழில்நுட்பம் மற்றும் H-வடிவ DRLகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

Tags

Next Story