சிட்ரோயன் பசால்ட் எஸ்யுவிக்கு முன்பதிவு ஆரம்பம் !!

சிட்ரோயன் பசால்ட் எஸ்யுவிக்கு முன்பதிவு ஆரம்பம் !!
X

சிட்ரோயன் பசால்ட் 

சிட்ரோயன் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய கூப் எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய மாடல் பசால்ட் என்று அழைக்கப்படுகிறது.

சிட்ரோயன் பசால்ட் மாடல் இந்தியாவில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதிய பசால்ட் கூப் எஸ்யுவி மாடல் வெளியீட்டுக்கு முன் இந்த காருக்கான முன்பதிவுகள் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது தேர்வு செய்யப்பட்ட விற்பனையாளர்கள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பசால்ட் எஸ்யுவிக்கு முன்பதிவை எடுத்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

அதன்படி வாடிக்கையாளர்கள் ரூ. 25 ஆயிரம் முன்பணம் செலுத்தி புதிய சிட்ரோயன் பசால்ட் எஸ்யுவி-யை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Tags

Next Story