CE 02 எலெக்ட்ரிக் டூவிலர் வெளியீட்ட பி.எம்.டபிள்யூ. நிறுவனம் !!

CE 02 எலெக்ட்ரிக் டூவிலர் வெளியீட்ட பி.எம்.டபிள்யூ. நிறுவனம் !!
X

CE 02 எலெக்ட்ரிக் டூவிலர் 

பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்திய சந்தையில் தனது CE 02 எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.

ஆல்-எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கும் இரண்டாவது வாகனம் ஆகும். முன்னதாக பி.எம்.டபிள்யூ. CE 04 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஏற்கனவே சர்வதேச சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும் பி.எம்.டபிள்யூ. CE 02 மாடல் ஓசூரில் உள்ள டி.வி.எஸ். ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தில் 3.92 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் 11 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் கொண்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரில் உள்ள மோட்டார் 11/15 கிலோவாட் ஹெச்பி பவர் மற்றும் 55 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

இந்த வாகனம் முழு சார்ஜ் செய்தால் 95 கிலோமீட்டர்கள் வரை செல்லும் திறன் உள்ளது.

இதன் விலை ரூ. 4.5 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களில் கிடைக்கும் ஒன்றாக இது இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story