650 ஹெச்பி பவர் கொண்ட புதிய போர்ஷே கார் அறிமுகம் !!

650 ஹெச்பி பவர் கொண்ட புதிய போர்ஷே கார் அறிமுகம் !!
X

போர்ஷே கார்

போர்ஷே நிறுவனத்தின் முற்றிலும் புதிய 911 டர்போ 50 ஆண்டுகளை கொண்டாடும் மாடல் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த மாடலின் இந்திய விற்பனை துவங்கியுள்ளது. இந்திய சந்தையில் புதிய போர்ஷே 911 (50 Years) மாடலின் விலை ரூ. 4.05 கோடி, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த மாடல் போர்ஷேவின் முதன்முதல் 911 டர்போ மாடல் வெளியாகி 50 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் உலகம் முழுக்க மொத்தத்தில் 1974 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்துள்ளனர்.

இந்திய சந்தையில் போர்ஷே 911 டர்போ எஸ் மாடலின் விலையை விட புதிய மாடல் விலை ரூ. 7 லட்சம் வரை அதிகம் ஆகும். இதே போன்று 911 கரெரா மாடலை விட ரூ. 2 கோடியும், கரெரா 4 GTS மாடலை விட ரூ. 1.26 கோடியும் அதிகம் ஆகும். முந்தய 911 டர்போ எஸ் மாடலை போன்றே புதிய 911 டர்போ (போ 911 ) மாடலிலும் 3.7 லிட்டர் டுவின் டர்போ ஃபிலாட் 6 பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது.

இந்த யூனிட் 650 ஹெச்பி பவர், 800 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 2.7 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் மணிக்கு அதிகபட்சம் 330 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

Tags

Next Story