முற்றிலும் நியூ வெர்ஷனில் களமிறங்கும் எஸ்யுவி - டீசர் வெளியீட்ட கியா நிறுவனம் !!

முற்றிலும் நியூ வெர்ஷனில் களமிறங்கும் எஸ்யுவி - டீசர் வெளியீட்ட கியா நிறுவனம் !!
X

கியா இந்தியா நிறுவனம் தனது எஸ்யுவி பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி புதிய கியா எஸ்யுவி மாடலை சைரோஸ் என்ற பெயரில் அழைக்கின்றனர்.

கியா கார்னிவல் மற்றும் கியா EV9 மாடல்களை தொடர்ந்து அசத்தலான டிசைன், அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த எஸ்யுவி மாடல் கியா நிறுவனத்தின் முதல் புதிய தலைமுறை எஸ்யுவி ஆகும்.

கியா நிறுவனத்தின் புதுவரவு மாடலாக சைரோஸ் மாடல் அமைகிறது. புதிய சைரோஸ் மாடலுக்கான டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. கம்பீர தோற்றம், அதிநவீன அம்சங்கள் கொண்ட எஸ்யுவி மாடலாக சைரோஸ் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இது தலைசிறந்த பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளதாக தெரிகிறது.

அதிக இடவசதி கொண்ட இன்டீரியர், ஏராளமான கனெக்டெட் அம்சங்கள் மற்றும் அசத்தலான டிரைவிங் அனுபவத்தை சைரோஸ் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சைரோஸ் மாடலில் 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட NA பெட்ரோல் எஞ்சின், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT யூனிட்கள் வழங்கப்படும் என சொல்லப்படுகிறது.அதிக இடவசதி கொண்ட இன்டீரியர், ஏராளமான கனெக்டெட் அம்சங்கள் மற்றும் அசத்தலான டிரைவிங் அனுபவத்தை சைரோஸ் வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.


Tags

Next Story