ரூ.5.99 லட்சத்தில் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகம் செய்த நிசான் நிறுவனம் !!

ரூ.5.99 லட்சத்தில் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகம் செய்த நிசான் நிறுவனம் !!
X

மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் 

நிசான் நிறுவனத்தின் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் காரை இந்திய சந்தையில் ரூ.5.99 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த காரை வாங்கும் முதல் 10,000 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த விலையில் விற்பனை செய்யப்படும். அதன் பிறகு விலை உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மேலும், நிசான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடலானது ஆறு வேரியண்ட்கள், இரண்டு எஞ்சின் ஆப்ஷன்களுடன் இரண்டு-பெடல் மற்றும் மூன்று-பெடல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டிசைன் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஸ்டீரிங் வீல்க்கு, புதிய நிறங்கள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இதில் 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் போன் மிரரிங், டிரைவர் சீட் உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதி, பவர்டு மிரர்ஸ், HEPA ஏர் பில்டர்ஸ், LED ஹெட்லேம்ப்கள் மற்றும் LED DRLs ஆகியவை வழங்கப்படுகிறது.

இத்துடன், 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட்கள், 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், 3 பாயிண்ட் சீட் பெல்ட்கள் ஆகியவற்றுடன் வருகிறது.

இந்த கார் 1.0 லிட்டர் NA பெட்ரோல் அல்லது 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என இரண்டு எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

Tags

Next Story