ரசிகர் பட்டாளமே இருக்கும் யமஹா RX100 மாடலை புதுப்பிப்பது பெரும் சவால் - நிறுவன தலைவர் பேட்டி !

ரசிகர் பட்டாளமே இருக்கும் யமஹா RX100 மாடலை புதுப்பிப்பது பெரும் சவால் - நிறுவன தலைவர் பேட்டி !
X

யமஹா RX100 

ஜப்பான் நாட்டு இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் யமாஹா. இந்நிறுவனம் தயாரித்த RX100 1980 முதல் 1990-க்களில் மிகவும் பிரபலம் ஆகும். இன்றும் இந்த மாடலுக்கென தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த நிலையில் யமஹா RX100 மாடலை இன்றைய பயன்பாட்டுக்கு ஏற்றவகையில் மாற்றி வெளியிட அந்நிறுவனம் முடிவு செய்வதாக தகவல் வெளியாகியது.

இந்த நிலையில், இருசக்கர வாகன பிரியர்களிடம் பிரபலமாக இருக்கும் RX100 மாடலை புதுப்பிப்பது பெரும் சவாலாக உள்ளது என்று அந்நிறுவன இந்திய தலைவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

யமஹாவை விரும்புபவர்கள் RX100 மாடலை மீண்டும் கொண்டு வரவேண்டும் என விரும்புகிறார்கள். RX மாடலை மாற்றாமல் புதுப்பிப்பது என்பது கடினமான பணி. RX100-ன் வடிவமைப்பை மிகவும் விரும்பினர். மேலும் அதன் குறைந்த எடை மற்றும் ஒலி ஆகியவற்றாலும் பெரும்பாலும் விரும்பப்பட்டது.

இந்த இரண்டையும் ஸ்மார்ட் என்ஜினியரிங் மற்றும் டிசைன் மூலம் மாற்ற முடியும் என்றாலும் ஒலி பகுதியை 4-ஸ்டிரோக் என்ஜினுடன் பொருத்துவது கடினம். பழைய RX 100 மாடல் 2-ஸ்டிரோக் மோட்டார் மூலம் இயக்கப்பட்டது. ஆனால் தற்போதைய விதிமுறைகளால் இது சாத்தியப்படாது.

RX 100-ன் பஞ்ச் ஆக்ஸலேட்டரை இன்று மீண்டும் உருவாக்குவது சவாலாக இருக்கிறது. இருப்பினும் தேவைகளை பூர்த்தி செய்து, RX 100 மாடலை மீண்டும் புதுப்பிக்க நிறுவனம் விரும்புகிறது என்றார்.

Tags

Next Story