கார்களின் ஆரம்ப விலையை குறைத்த டாடா நிறுவனம் - காரணம் என்ன-னு தெரியுமா !!

கார்களின் ஆரம்ப விலையை குறைத்த டாடா நிறுவனம் - காரணம் என்ன-னு தெரியுமா !!
X

டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ் வரும் விழாக் காலத்தை முன்னிட்டு அதன் அனைத்து கார் மாடல்களின் விலையையும் குறைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 'கார்களுக்கான திருவிழா' எனும் பெயரிலேயே விலை குறைப்பை அது செய்திருக்கின்றது. ரூ. 30 ஆயிரம் தொடங்கி ரூ. 1.80 வரை விலை குறைப்பைச் செய்திருக்கின்றது.

டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் டியாகோ (Tiago), டிகோர் (Tigor), அல்ட்ராஸ் (Altroz), நெக்ஸான் (Nexon), ஹாரியர் (Harrier) மற்றும் சஃபாரி (Safari) ஆகிய கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டு இருக்கின்றது. இவற்றின் ஆரம்ப விலையையே டாடா மோட்டார்ஸ் தற்போது குறைத்திருக்கின்றது.

ஆரம்ப விலை மட்டுமே குறைக்கப்பட்டு இருக்கின்றது என நெகிழ்ச்சி அடையும் மக்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக டாடா மோட்டார்ஸ் ரூ. 45 ஆயிரத்திற்கான சிறப்பு பலன்கள் திட்டத்தையும் அறிவித்திருக்கின்றது. இது அனைத்து மாடல்களின் அனைத்து வேரியண்டிற்கும் பொருந்தும் என தெரிகின்றது. கேஷ்பேக் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களை வழங்குதல் ஆகியவற்றையே இதன் கீழ் டாடா நிறுவனம் வழங்கும் என தெரிகின்றது.

Tags

Next Story