ரோனின் மாடலின் விலையை குறைத்த டிவிஎஸ் மோட்டார்ஸ் !!

ரோனின் மாடலின் விலையை குறைத்த டிவிஎஸ் மோட்டார்ஸ் !!
X

 டிவிஎஸ் மோட்டார்ஸ்

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் பண்டிகை காலத்தை ஒட்டி விலை குறைப்பை அறிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் ரோனின் மோட்டார்சைக்கிள் விலையை குறைத்துள்ளது.

விலை குறைப்பின் படி டிவிஎஸ் ரோனின் எஸ்எஸ் வேரியண்ட் விலை ரூ. 1 லட்சத்து 35 ஆயிரம் என விலையை குறைத்துள்ளது. இது முந்தைய விலையை விட ரூ. 14 ஆயிரம் வரை குறைவு ஆகும். இந்த விலை குறைப்பு பேஸ் வேரியண்டிற்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

திடீர் விலை குறைப்பு தவிர இந்த மோட்டார்சைக்கிளில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், ரோனின் எஸ்எஸ் மாடலில் எல்இடி ஹெட்லைட், இன்செட் டிஆர்எல், எல்இடி டெயில் லைட், எல்சிடி மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.

டிவிஎஸ் ரோனின் மாடலில் 225.9சிசி ஏர் மற்றும் ஆயில் கூல்டு சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த எஞ்சின் 20.1 ஹெச்பி பவர், 19.93 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

Tags

Next Story