யமஹா R15M ஸ்பெஷல் எடிஷன் மாடலை அறிமுகம் செய்துள்ளது !!

யமஹா R15M ஸ்பெஷல் எடிஷன் மாடலை அறிமுகம் செய்துள்ளது !!
X

யமஹா R15M

யமஹா R15M மோட்டார்சைக்கிள் ஸ்பெஷல் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

2024 யமஹா R15M மோட்டோ ஜிபி எடிஷன் பெயரில் இந்த பைக் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பைக் யமஹாவின் மோட்டோ ஜிபி அணியின் மான்ஸ்டர் எனர்ஜி நிறங்களை கொண்டிருக்கிறது.

இதன் பிரதான நிறம் கருப்பாகவும், ஆங்காங்கே புளூ மற்றும் சில்வர் நிற அக்சென்ட்கள் மற்றும் மான்ஸ்டர் எனர்ஜி லோகோ ஃபேரிங்கில் இடம்பெற்று இருக்கிறது.

யமஹாவின் புதிய R15 மாடலில் 155சிசி, லிக்விட் கூல்டு, சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 18 ஹெச்பி பவர், 14.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த பைக் டிஎப்டி டிஸ்ப்ளே மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி கொண்டுள்ளது.

2024 யமஹா R15M மான்ஸ்டர் எனர்ஜி எடிஷன் விலை ரூ. 1 லட்சத்து 98 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Tags

Next Story