துபாயில் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் அமெரிக்க தமிழ் பிரமுகருக்கு வரவேற்பு

துபாயில் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் அமெரிக்க தமிழ் பிரமுகருக்கு வரவேற்பு

துபாயில் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் அமெரிக்க தமிழ் பிரமுகரும், ஆய்வாளரும், முன்னாள் மாணவர் சங்க வட அமெரிக்க கிளை தலைவருமான டாக்டர் அப்துல் ருக்னுதீனுக்கு வரவேற்பு நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் பூதமங்கலம் அல்ஹாஜ் ஜியாவுதீன் தலைமை வகித்தார். அவர் தனது உரையில் சங்கத்தின் செயல்பாடுகளில் இளைஞர்கள் தங்களை அதிகம் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். நமது கல்லூரியில் படித்து அமெரிக்காவில் உயர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றாலும் , ஓய்வில்லாமல் ஆய்வுப் பணிகளை தொடர்ந்து செய்து வரும் டாக்டர் அப்துல் ருக்னுதீனுக்கு வரவேற்பு அளிப்பதில் அமீரக சங்கம் பெருமை கொள்கிறது என்றார்.

சங்க பொதுச் செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். துணைப் பொதுச் செயலாளர் மன்னர் மன்னர் தொடக்கவுரை நிகழ்த்தினார். வடக்கு அமெரிக்க சங்க தலைவர் டாக்டர் அப்துல் ருக்னுதீன் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. அவர் தனது ஏற்புரையில் அமீரகத்தில் முன்னாள் மாணவர் சங்கம் வழங்கிய வரவேற்புக்கு நன்றி தெரிவித்தார். அனைவரும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நமது கல்லூரியில் பலர் ஆய்வுப் பட்டம் பெற்றுள்ளனர். ஆய்வுப் பட்டம் பெற்றவர்களின் திறன் மேம்பாட்டுக்கு தேவையான பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். நம்மால் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்றார்.

இஸ்லாம் டைரி மாத இதழின் ஆசிரியர் காஜா மைதீன், அமீரக காயிதேமில்லத் பேரவையின் துணைத்தலைவர் திருப்பனந்தாள் ஏ. முஹம்மது தாஹா, முன்னாள் மாணவர் சங்க துணைத் தலைவர் ஜாபர் சித்திக், ஃபார்ம் பாஸ்கெட்டின் உரிமையாளர் வலசை பைசல் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர், முதுவை ஹிதாயத் நிகழ்வினை தொகுத்து வழங்கினார். சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் ஃபஸ்ருதீன் நன்றி கூறினார். நவாசுதீன், ரஹ்மத்துல்லா உள்ளிட்ட குழுவினர் விழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்புடன் செய்திருந்தனர்.

Tags

Next Story