வேதியியல் கழக துவக்கவிழா

வேதியியல் கழக துவக்கவிழா

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, வேதியியல் துறை சார்பாக 28.08.2024 அன்று பேராசிரியர் அப்பாஸ் அலி வேதியியல் கழகம் துவக்க விழா நடைபெற்றது. துறைத்தலைவர் செய்யது அபுதாஹிர் வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு செயலர்,ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான், ஆட்சிக்குழு உறுப்பினர் ஹமீத் தாவூத் சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் சபினுல்லாகான், கல்லூரி துணைமுதல்வர் முஸ்தாக் அகமது கான் மற்றும் கல்வியியல் கல்லூரி முதல்வர் முஹம்மது முஸ்தபா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்புவிருந்தினராக காரைக்குடி, அழகப்பா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேதியியல் துறை, இணைப்பேராசிரியர், செந்தில் குமார் கலந்துகொண்டு, வேதியியல் கழகத்தை துவக்கிவைத்து, குப்பை உள்ளிட்ட பயனற்ற பொருட்களிலிருந்து மின்சாரம் தயாரித்தல் குறித்து பேசினார். இறுதியாக இணைப்பேராசிரியர் சுல்த்தான் செய்யது இப்ராஹிம் நன்றி கூறினார். நிகழ்ச்சியினை உதவிப்பேராசிரியர்கள் ஜெயமுருகன் மற்றும் ஜெஸீமா ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags

Next Story