சமூக சேவகர் சையத் ஹனீஃப் அவர்களுக்கு குதைபியா கூட்டம் சமூக நலக் குழுவின் விருது
பஹ்ரைனில் சமூக நல துறையில் போற்றத்தக்க சேவை செய்து வரும் குதைபியா கூட்டத்தின் புரவலர்களில் ஒருவரும், லைட்ஸ் ஆஃப் கைன்ட்னஸின் நிறுவனருமான சையத் ஹனீஃபை குதைபியா கூட்டம் கௌரவித்துள்ளது. ஜல்லாக் பகுதி பீச் பே ரிசார்ட்டில் நடைபெற்ற குதைபியா கூட்டத்தின் ஓணம் கொண்டாட்டமான "ஓணத்திளக்கம் 2024" நிகழ்ச்சியின் போது இந்த விருது வழங்கப்பட்டது.
குதைபியா கூட்டம் புரவலர்கள் கேட்டி சலீம், ரோஜி ஜான், அட்மின் சுபிஷ் நிட்டூர், பொருளாளர் கோபிநாதன், ரியாஸ் வடகரை,மகளிர் நிர்வாகி ரேஷ்மா மோகன், செயற்குழு உறுப்பினர்கள் ஜிஷார் கடவலூர், முஜீப் ரஹ்மான் மற்றும் ஒருங்கிணைப்பு - திட்டக்குழு உறுப்பினர்கள் ஷில்பா சிஜு, ரஜினா இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர். சையது ஹனீஃப் அவர்கள் குதைபியா கூட்டம் செய்து வரும் சமூக நலசேவைகளுக்கு தனது ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார். ஓணம் பண்டிகையின் ஒரு பகுதியாக பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளும் அரங்கேறின.