10வது தேர்ச்சி ! ரயில்வே துறை வேலைவாய்ப்பு | மொத்தம் 32438 காலிப்பணியிடங்கள்; ரூ.18,000 சம்பளம் | உடனே விண்ணப்பிக்கவும் RRB Group D Recruitment 2025| king news 24x7

இந்தியன் ரயில்வே
RRB Group D Recruitment 2025: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) குரூப் ‘D’ பதவிகளை நிரப்ப ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது. RRB Group D ஆட்சேர்ப்பு 2025 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி தற்போது காலியாகவுள்ள 32438 குரூப் D பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 22.02.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
ரயில்வே குரூப் D வேலைவாய்ப்பு ஆனது 2018 ஆம் ஆண்டில் 62097 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில் 103769 பணியிடங்கள் நிரப்பபட்டுள்ளது. அதன்பின் 5 வருடங்கள் கழித்து தற்போது 32438 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைவாய்ப்பு மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பிக்கவும்.
வேலை பிரிவு - Central Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB)
காலியிடங்கள் - 32438 குரூப் D
விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன் மூலம்
கடைசி தேதி - 22.02.2025
பணியிடம் - தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ இணையதளம் - https://www.rrbapply.gov.in/