மனைவியை விவாகரத்து ? பிரபல நடிகையுடன் டேட்டிங்கில் சர்ச்சையில் சிக்கிய மாதம்பட்டி ரங்கராஜ் ? | CINEMA | KING NEWS 24X7

மனைவியை விவாகரத்து ?  பிரபல நடிகையுடன் டேட்டிங்கில் சர்ச்சையில் சிக்கிய மாதம்பட்டி ரங்கராஜ் ? | CINEMA | KING NEWS 24X7
X

மாதம்பட்டி ரங்கராஜ்  

மாதம்பட்டி ரங்கராஜ் என்றால் தென்னிந்தியாவில் தெரியாதவர்களே இருக்க முடியாது. திரை பிரபலங்கள் தொடங்கி, அரசியல்வாதிகளின் இல்லத் திருமணங்கள் வரை அனைத்து விழாக்களிலும் மாதம்பட்டி ரங்கராஜின் உணவு தான் பேமஸ். மேலும் பலரும் ஒரு கௌரவத்திற்காகவும் மாதம்பட்டி ரங்கராஜை தேர்வு செய்கின்றனர். இவரை புக்கிங் செய்ய பல லட்சங்கள் செலவு செய்ய வேண்டும் என்றாலும் அதனை பொருட்படுத்தாமல் செலவு செய்து புக் செய்கின்றனர். நீண்ட நாட்களாக இந்தத் துறையில் கொடி கட்டி பறக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் மெகந்தி சர்க்கஸ் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.


இருப்பினும் அந்த படம் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை கடந்து ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார் மாதம்பட்டி ரங்கராஜ். அதன் பிறகு தமிழக முழுவதும் பிரபலமான ஒரு செலிபிரேட்டியாக மாறி உள்ளார். ஏற்கனவே பிரபலமாக இருப்பினும் இந்த நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமாகி உள்ளார். அடுத்தடுத்து சில படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இதற்கான அறிவிப்புகளும் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் சினிமா பிரபலத்துடன் நெருங்கி பழகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


மாதம்பட்டி ரங்கராஜிற்கு ஸ்ருதி என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா என்பவருடன் டேட்டிங்கில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் இந்த தகவல் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் ஜாய் கிரிஸில்டா அவரது இன்ஸ்டாகிராமில் மாதம்பட்டி ரங்கராஜை மை மேன் என்று குறிப்பிட்டுள்ளார். மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு பூ வாங்கி கொடுத்ததாகவும் பதிவிட்டுள்ளார். இவர் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தனது முதல் மனைவி ஸ்ருதியை விவாகரத்து செய்துவிட்டு விரைவில் மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவி வருகிறது. இருவரும் ஒன்றாக இருக்கும் சில புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகிய அதிர்ச்சி அளித்துள்ளது. இருப்பினும் இது குறித்து இருவரது தரப்பில் இருந்தும் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இவை அனைத்தும் பொய்யாக இருக்க வேண்டும் என்று மாதம்பட்டி ரங்கராஜின் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.




Next Story