இளைஞரை இழுத்து போட்டு அடித்த பிரபல யூடியூபர் VJ சித்து ! கிங் நியூஸ் 24x7

இன்றைய டிஜிட்டல் உலகில் திரும்பும் இடமெல்லாம் இன்ஸ்டாகிராமிலும் பேஸ்புக்கிலும் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் பலர் இருக்கின்றனர். இதில் youtuberகளும் அடக்கம். அப்படி தமிழகத்தில் பெரும்பாலான இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் vj siddhu
கதை பேசி, கண்டன்ட் போஸ்ட் செய்து யூட்யூபில் பிரபலமாக வலம் வருபவர்கள் ஒரு விதம். இயல்பாக வாழ்வில் நடக்கும் விஷயங்களை வீடியோவாக எடுத்து, அதன் மூலம் பிரபலமாக இருப்பவர்கள் இன்னொரு விதம். அப்படி, தனது நண்பர்களுடன் அல்லது குழந்தையுடன் அல்லது குடும்பத்தினருடன் இருக்கும் கதைக்கும் விஷயங்களை வீடியோவாக எடுத்து பதிவிட்டு இப்போது பல லட்சம் சப்ஸ்கிரைப்பர்ஸ் சம்பாதித்து இருப்பவர் வி.ஜே சித்து. இவர் சமீபத்தில் வெளியிட்டிருந்த ஒரு வீடியோதான் தற்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
இணையத்தில் தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில், VJ சித்து, தரையில் சும்மா அமர்ந்திருக்கும் ஒருவரை இழுத்து போட்டு அடிக்கிறார். அவர் அணிந்திருக்கும் லுங்கியை எடுத்து அவரது பின்னால் எட்டி உதைக்கிறார். இடுப்பில், தலையில் என தனக்கு தோன்றும் இடங்களில் எல்லாம் அந்த இளைஞரை அடிக்கிறார். இதைப் பார்த்து அவரது நண்பர்கள், “ஏன் அண்ணா அடிக்கிறீங்க?” சிரித்துக் கொண்டே கேட்டு தடுக்கின்றனர். அதற்கு அவர், “குந்தல் சொல்லவில்லை..” என்று கூறுகிறார். தொடரும் அந்த வீடியோவில், “குந்தல் சொன்னியா? நீ குந்தல் சொன்னியா?” என்று கேட்டு இன்னும் சிலரையும் துரத்துகிறார்.
வி.ஜே.சித்து, முதலில் வேறு ஒரு பெரிய டிஜிட்டல் யூடியூப் சேனலில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். பின்னர் தனியாக அதிலிருந்து பிரிந்து வந்த பிறகு, எங்காவது நண்பர்களுடன் வெளியூருக்கு சென்றால் அதை வீடியோவாக எடுத்து Vlog-ஆக பதிவிட ஆரம்பித்தார். இது ஹிட் ஆக, தொடர்ந்து அதையே ஃபாலோ செய்து வருகிறார். இவரது வீடியோக்கள், ஆரம்பம் முதலே நகைச்சுவை கண்டன்ட் ஆகத்தான் பார்க்கப்பட்டது. ஆனால், சமீப சில நாட்களாக இவரது வீடியோக்கள் இயல்பாக இருப்பதில்லை என்றும், காமெடி வலுக்கட்டாயமாக இந்த வீடியோக்களில் திணிப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
இப்போது வெளியாகியிருக்கும் வீடியோவில், அடிக்கும் விஜே சித்துவும், அவரிடம் அடி வாங்கும் விஜே சித்துவும் சிரித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். எனவே, இதை பலரும் தவறான பார்வையில் பார்த்து வருவதாகவும் சிலர் கூறி வருகின்றனர். இது குறித்து தமிழக காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.