எனக்கு ரொம்ப பிடித்த இயக்குனர் பாலுமகேந்திரா -இளையராஜா | தமிழ்சினிமா | கிங் நியூஸ் 24x7

X
தமிழ்சினிமா
ஒரு சில இயக்குனர்களின் படங்களுக்கு இசையமைக்கும் போது, மனதுக்கு இதமாக இருக்கும். அப்படி ஒரு உணர்வை ஏற்படுத்தக்கூடிய அளவில் பாலு மகேந்திராவின் படங்கள் இருக்கும் என்பதால், ரொம்பவே ரசனையோடு செய்வேன். அவரது ஒரு படத்துக்கு இன்னொரு படத்துக்கும் இசையமைக்கும் இடைவெளிகளில் நான் 100 படங்களுக்கு இசையமைத்து முடித்திருப்பேன். அந்தப் படங்களுக்கு இசையமைப்பதை விட, பாலு மகேந்திராவின் படங்களுக்கு இசையமைக்கும் போது இனம் புரியாத ஒரு சந்தோஷம் வந்து ஒட்டிக்கும்.
'பாலுமகேந்திராவை கொண்டாடுவோம்' நிகழ்ச்சியில் இளையராஜா பேசியது
Next Story