நடிகர் அஜித்குமார் களமிறங்கிய 'விடாமுயற்சி' திரைப்படத்தின் திரைவிமர்சனம் !!

அஜித்குமார்
நடிகர் அஜித்குமார் களமிறங்கிய 'விடாமுயற்சி' திரைப்படம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பல பிரச்சினைகளை கடந்து இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
இந்த படத்தை லைகா நிறுவனம் சார்பில் மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இப்படத்தில் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
திரைக்கதை :
அஜித்குமாரும், திரிஷாவும் காதலித்து திருமணம் செய்து அஜர்பைஜான் நாட்டில் வசித்து வருகிறார்கள். இதற்கிடையில் மனக்கசப்பு காரணமாக அஜித்குமாரை பிரிய திரிஷா முடிவு செய்துள்ள நிலையில் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றும், அதேவேளையில் கடைசியாக ஒரு பயணம் மேற்கொள்ள அஜித்குமார் முடிவு செய்கிறார்.
அப்படி ஒரு பயணத்தின் போது கார் பழுதாக நடுவழியில் அஜித்குமாரும், திரிஷாவும் தவிக்கிறார்கள். ஒரு கும்பல் தகராறில் ஈடுபடுகிறது. அப்போது அர்ஜுன் ரெஜினா தம்பதி உதவுகிறார்கள். இதற்கிடையில் திரிஷா திடீரென காணாமல் போகிறார். மாயமாகிப் போன மனைவியை கண்டுபிடிக்க அஜித்குமார் தேடுதல் வேட்டையில் ஈடுபடுகிறார். அப்போது பல பெண்கள் இதுபோல காணாமல் போனது தெரிய வருகிறது.
அஜர் பைஜான் நாட்டில் தொடர்ச்சியாக பெண்கள் காணாமல் போவது ஏன்? திரிஷாவை, அஜித் குமார் கண்டுபிடித்தாரா? என்பதே பரபரப்பான இப்படத்தின் மீதி கதை.
திரைவிமர்சனம் :
அஜித் குமார் மட்டுமே இந்த படத்தை முடிந்தவரை தாங்கியுள்ளார். ஆரவ், அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா எல்லாம் அவரை போட்டு அந்த அடி அடிக்கும் போது ரசிகர்களுக்கே ரத்தம் கொதிக்கிறது. தலை முடியை பிடித்து இழுப்பது, பூமர் என சொல்லி அசிங்கப்படுத்துவது போன்ற காட்சிகளில் அஜித் குமார் அண்டர்பிளே செய்து நடித்திருப்பது மிகப்பெரிய பிளஸ் ஆக இருந்தது. இடைவேளைக்குப் பிறகும் படத்தில் வரும் கார் ஸ்டன்ட் மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் எல்லாமே அனிருத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் தான் படத்தை தூக்கி நிறுத்தியுள்ளது. கிளைமேக்ஸில் ரெஜினா கசாண்ட்ராவுக்கு ஏற்படும் அந்த முடிவு சீன் மிரட்டல் பிளஸ் ஆக இருந்தது. அந்த பிரகாஷ் யார் என்பதையும் கடைசி வரை காட்டவே இல்லை. 24 படத்தின் இடைவேளை காட்சியில் சூர்யாவை சுட்டு வீழ்த்தும் போது இருந்த ஹைப் இந்த படத்தில் சீரியலில் ஏமாற்றும் எபிசோடு கட் போலவே இருந்தது அபத்தத்தின் உச்சம். அஜர்பைஜான் சாலைகளை காட்டிய விதம் மற்றும் காருக்குள் ஆரவ் மற்றும் அவரது கேங்குடன் சண்டையிடும் ஒரு சீன் சிறப்பாக இருந்தது. அஜித் ரசிகர்கள் ஒருமுறை இந்த படத்தை பார்க்கலாம்.