இனி புதிய பிக்பாஸ் இவர்தான்!

இனி புதிய பிக்பாஸ் இவர்தான்!
X

விஜய் சேதுபதி

இந்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ, தமிழிலும் 2017 ஆம் ஆண்டிலிருந்து ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். நிகழ்ச்சியைப் போலவை, கமல்ஹாசனின் கமென்டுகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இதேபோன்று படங்களின் மூலம் மக்களிடம் சென்றடைந்த கமல்ஹாசன், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகவும் ஏராளமானோரின் உள்ளங்களை கவர்ந்தார். 7 சீசன்கள் பிக்பாஸில் முடிந்த நிலையில் 8 ஆவது சீசனுக்கான பணிகளில் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திடீர் திருப்பமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதிலிருந்து விலகிக் கொள்வதாக கமல்ஹாசன் கடந்த 6 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

உங்கள் இல்லங்களில் உங்களைச் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. உங்கள் அன்பையும் பாசத்தையும் நீங்கள் எனக்கு அளித்துள்ளீர்கள். அதற்கு என்றும் நன்றியுடையவனாக இருப்பேன் என அவர் கூறியிருந்தார்.

மேலும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கும் மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விஜய் டிவியின் அற்புதமான பிக்பாஸ் குழுவிற்கும், இந்த நிறுவனத்தை மாபெரும் வெற்றியடையச் செய்வதில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு குழு உறுப்பினர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வரவிருக்கும் சீசன் இன்னொரு வெற்றிகரமான நிகழ்ச்சியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.

கமல்ஹாசனுக்காகவே பிக்பாஸ் நிகழ்ச்சியை கணிசமானோர் பார்த்து வந்தனர். இதனால் அவரது இடத்தை எந்த நடிகர் பூர்த்தி செய்வார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்பட்டது.

இந்நிலையில் கமல்ஹாசனுக்கு பதிலாக நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் சீசன் 8-யை தொகுத்து வழங்குவார் என்று விஜய் டிவி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Tags

Next Story