சூப்பர் ஸ்டாரின் வேட்டையன்.. ரிலீஸ் டேட் அறிவித்த படக்குழு !

சூப்பர் ஸ்டாரின் வேட்டையன்.. ரிலீஸ் டேட் அறிவித்த படக்குழு !
X

வேட்டையன்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டாராக உலா வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் படம் உருவாகியுள்ளது. ரஜினிகாந்துடன் இந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், மஞ்சுவாரியர் உள்பட பலரும் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், வேட்டையன் படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாக இருக்கிறது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது. ஏற்கனவே, அதே தேதியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள சூர்யாவின் கங்குவா திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், வேட்டையன் படமும் அதே தினத்தில் வெளியாக இருப்பது பெரும் பரபரப்பை கோலிவுட்டில் உருவாக்கியுள்ளது.

ஜெய்பீம் படத்தை இயக்கி தமிழ் திரையுலகில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர். இவரது இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானது முதலே பெரும் எதிர்பார்ப்பு உண்டானது. படத்தில் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், மஞ்சுவாரியர் ஆகியோர் நடிக்கின்றனர் என்ற அறிவிப்பு வெளியாகும் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்தது. இந்த படத்தில் பாகுபலி படத்தில் வில்லனாக நடித்த ராணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Tags

Next Story