ராட்வைலர் நாயை ஏவி 72 வயது முதியவரை கடிக்க வைத்த இளைஞர்.. சென்னையில் பரபரப்பு சம்பவம் | king news 24x7

X
ராட்வைலர்
சென்னை புழலில், 72 வயது முதியவரை ராட்வைலர் நாயை ஏவி கடிக்க வைத்த வழக்கறிஞர் கவியரசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை புழலில் 72 வயது முதியவரை, ராட்வைலர் நாயை ஏவி, கடிக்க வைத்து, மனைவி முன் அரைநிர்வணமாக்கிய இளைஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.,
சென்னை புழல் புத்தகரம் கணபதி நகரில், கவியரசன் என்ற வழக்கறிஞர், ராட்வைலர் நாயுடன் நாள்தோறும் வாக்கிங் செல்வதாக தெரிகிறது. ஆனால், நாயை கயிறு கட்டாமலும், வாய் பகுதியை மூடாமலும் அழைத்து செல்வதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பாக, அப்பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்ற 72 வயது முதியவர், கவியரசனுடன் வாக்குவாதம் செய்தார். அப்போது, தனது ராட்வைலர் நாயை ஏவி முதியவரை கடிக்க வைத்த கவியரசன், அவரது மனைவி முன்பு, அரைநிர்வாணமாக்கி கொடுமைப்படுத்தியுள்ளார்.
Next Story