பூட்டிய வீட்டுக்குள் ஐந்து மாதங்களாக கிடந்த தந்தை-மகளின் சடலங்கள் - சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் | கிங் நியூஸ் 24x7 |

பூட்டிய வீட்டுக்குள் ஐந்து மாதங்களாக கிடந்த தந்தை-மகளின் சடலங்கள் - சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் | கிங் நியூஸ் 24x7 |
X

சென்னை 

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், பூட்டிய வீட்டுக்குள் ஐந்து மாதங்களாக கிடந்த தந்தை-மகளின் சடலங்களை காவல் துறையினர் மீட்டுள்ளனர் என்று, தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.


வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சிந்தியா (37) என்ற பெண்ணுக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சாமுவேல் எபினேசருக்கும் சமூக ஊடகம் மூலம் தொடர்பு ஏற்பட்டுள்ளது. சிந்தியா தனது தந்தை சாமுவேல் சங்கருக்கு (78) டயாலிசிஸ் சிகிச்சை வழங்க வேண்டும் என்று கூறியபோது தான் சிகிச்சை அளிப்பதாக கூறியுள்ளார். அதன்படி, சிந்தியாவும் சாமுவேல் சங்கரும் சென்னை திருமுல்லைவாயலில் எபினேசர் தங்கி இருந்த வீட்டுக்கு வந்துள்ளனர்.


இந்நிலையில், செப்டம்பர் 6ம் தேதி சாமுவேல் சங்கர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிந்தியா எபினேசருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஏற்பட்ட மோதலில் சிந்தியாவை கீழே தள்ளிவிட்டதில், தலையில் காயம் ஏற்பட்டு சிந்தியா இறந்துவிட்டார் என தெரியவந்ததாக அச்செய்தி கூறுகிறது.


எபினேசர் பின்னர் இருவரிடன் உடல்களை ஒரு அறையில் வைத்து பூட்டியதாகவும் ஏசி இயந்திரத்தை இயக்கிவிட்டு, வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டு யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் சென்றுவிட்டதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிந்தியாவின் உறவினர்கள் சிந்தியாவிடமிருந்து ஐந்து மாதங்களாக பேச முடியாததால் சந்தேகப்பட்டு, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, எபினேசரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Tags

Next Story