அவன் செய்தது சரி என்று நான் சொல்லவில்லை பாசத்தால் நான் படும் அவஸ்தையால் இந்த முடிவை எடுத்திருக்கிறான்- மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் !!!

அவன் செய்தது சரி என்று நான் சொல்லவில்லை பாசத்தால் நான் படும் அவஸ்தையால் இந்த முடிவை எடுத்திருக்கிறான்- மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் !!!
X

விக்னேஷ் தாய்

சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் தலைமை மருத்துவர் பாலாஜியை, நோயாளியின் மகன் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முதலமைச்சர் முக ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததோடு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்,அமைச்சர் மா.சுப்பிரமணியன் உட்பட அதிமுக அமைச்சர்கள் முதலியோர் மருத்துவனைக்கு நேரில் சென்று மருத்துவரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.

மருத்துவரை கத்தியால் குத்தப்பட்டதை கண்டித்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் மருத்துவரை குத்திய விக்னேஷ் என்பரை கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை நடத்தியதில் தன்னுடைய தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்காததால் மருத்துவரை கத்தியால் குத்தியதாக தெரிவித்தார். கைதுசெய்யப்பட்ட விக்னேஷ் மீது கொலை முயற்சி, ஆபாசமாக பேசுதல் உட்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டு சைதாப்பேட்டை பெருநகர 9வது குற்றவியல் நீதிமன்றத்தில் விக்னேஷ்வரன் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம், விக்னேஷ்வரனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி வரும் 27 ஆம் தேதி வரை விக்னேஷ் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து விக்னேஷ்வரனை சிறையில் அடைக்க போலீசார் அழைத்துச் சென்றனர்.

செய்தியாளர்களிடம் பேசிய விக்னேஷின் தாயார் பிரேமா, "கிண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றபோது எனக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை. டாக்டர் பாலாஜி எப்பொழுதும் அவ மரியாதையாக பேசுவார். மருத்துவ பரிசோதனை அறிக்கையை கூட பார்க்க மாட்டார்.

விக்னேஷ் என்னுடன் இருந்து என்னை கவனித்துக்கொண்டான்.டாக்டர் பாலாஜிக்கும் எங்களுக்கும் எந்த முன்விரோதமும் இல்லை. என் தாயின் நுரையீரல் பாதிப்பு குறித்து ஏன் சொல்லவில்லை என்பதே என் மகனின் ஆதங்கம். அவன் செய்தது சரி என்று நான் சொல்லவில்லை. தாய்ப் பாசத்தில் செய்து விட்டான். அவனும் இருதய நோயாளி. அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவன்.

வீட்டை காவல் துறையினர் சோதனையிட்டு, என்மருத்துவ ஆவணம், என் மகனின் சில ஆவணங்கள் உள்ளிட்ட வற்றை எடுத்துச் சென்றுள்ளனர். நேற்று முன்தினம் சுவாசக்கோளறு அதிகமான நிலையில் பிழைக்கமாட்டேன் என கூறியுள்ளனர்.டாக்டரை அவன் கத்தியால் குத்தியது எனக்கு தெரியாது. அது தவறுதான். என் மேல் இருக்கும் பாசத்தால் நான் படும் அவஸ்தையால் இந்த முடிவை எடுத்திருக்கிறான். அவனுக்கு எந்த பாதிப்பும் வர கூடாது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

Tags

Next Story