மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய நபர் கைது - பள்ளி குழந்தைகள் உட்பட 8 பேர் படுகாயம் !!

மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய நபர் கைது - பள்ளி குழந்தைகள் உட்பட 8 பேர் படுகாயம் !!
X

விபத்து

செங்கல்பட்டு அடுத்த பினாயூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது, உறவினர் மகேஸ்வரியை ஏற்றிக்கொண்டு திம்மாவரம் நோக்கி வந்த நிலையில், கார்த்திக் மதுபோதையில் இருந்ததால், வரும் வழியில் ஒரக்காட்பேட்டை பகுதியில் ஸ்கூட்டியில் வந்த மீன் வியாபாரி, பள்ளி ஆட்டோ மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில், ஆட்டோவில் வந்த, சிதண்டி மண்டபம் பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவரது மனைவி சுகுணா (31), இவரது மகன் விசாகன் (5), மகள் யாஷிகா (7), மற்றும் அதே பகுதியை சேர்ந்த கலைமணி மகன்கள் கிருஸ்வந்த் (13), சஸ்வந்த் (11 ஆகிய பள்ளி குழந்தைகள், மீன் வியாபாரி, காரில் வந்த மகேஸ்வரி, ஆட்டோ டிரைவர் சதீஷ்குமார் உள்பட 8 பேர் படுகாயமடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காரை பறிமுதல் செய்து மதுபோதையில் காரை ஓட்டிவந்து விபத்தை ஏற்படுத்திய கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story