மயிலாடுதுறை இரட்டைக் கொலை வழக்கு ! என்ன நடந்தது ? | கிங் நியூஸ் 24x7

மயிலாடுதுறை கொலை வழக்கு
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் நிலைய எல்லைக்குள் பிப்ரவரி 14, 2025 அன்று பதிவான இரட்டைக் கொலை வழக்கு தொடர்பாக மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், முன்விரோதம் காரணமாக இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதாக காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் காவல் சரகம், முட்டம் கிராமம், வடக்கு தெருவில் வசிக்கும் மூவேந்தன் (24 வயது) என்பவர் கடந்த 13-ம் தேதி மாலை சுமார் 6 மணியளவில் அவரது தெருவில் நின்று கொண்டிருந்த போது. அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற அதே தெருவில் வசிக்கும் தினேஷ் (28 வயது) என்பவர் மேற்படி மூவேந்தனை பார்த்து கூச்சலிட்டு சென்றுள்ளார். இவர்களுக்குள் ஏற்கனவே குடும்ப தகராறு இருந்துள்ளது.