பேபிகார்ன் ஃப்ரைடு ரைஸ்

பேபிகார்ன் ஃப்ரைடு ரைஸ்
X

பேபிகார்ன் ஃப்ரைடு ரைஸ்

பேபிகார்ன் ஃப்ரைடு ரைஸ்

தேவையான பொருட்கள்:

பேபிகார்ன் - 1 கப்

கேரட் - 1/4 கப்

பீன்ஸ் - 1/4 கப்

பட்டாணி - 1/4 கப்

கொத்துமல்லி - 1/2 கப்

புதினா - 1/2 கப்

தேங்காய் - 1 மூடி

மிளகாய்ப்பொடி - 1 டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்

நெய் - 3 டீஸ்பூன்

எண்ணெய் - 3 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

பாசுமதி அரிசி - 2 கப்

செய்முறை:

தேங்காயை பாலெடுத்து அரிசியுடன் சேர்த்து உதிரியாக வடித்துக் கொள்ளவும்.

ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய பேபிகார்ன், கேரட், பீன்ஸ், பட்டாணி (பச்சை பட்டாணி) ஆகியவற்றை போட்டு சிறு தீயில் வதக்கவும்.

நன்கு வதங்கியவுடன் கரம்மசாலாத்தூள், மிளகாய்த் தூள், உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து கிளறி, மல்லி, புதினாவை போட்டு நன்கு வதக்கவும்.

பிறகு சாதத்தை சேர்த்துக் கிளறி சிறிது நேரம் மூடி வைக்கவும். நெய்யை மேலே விட்டு ஒரு முறை கிளறி மல்லித்தழை தூவி இறக்கவும்.

Tags

Next Story