பீர்க்கங்காய் பால் குழம்பு ரெசிபி !!

பீர்க்கங்காய் பால் குழம்பு ரெசிபி !!
X

பீர்க்கங்காய் பால் குழம்பு 

தேவையான பொருட்கள் :

பீரக்கங்காய் - 1

தக்காளி - 2

சின்ன வெங்காயம் - 10

கடுகு - 4 ஸ்பூன்

வெந்தயம் - 1 ஸ்பூன்

பச்சை மிளகாய் - 3

பெருங்காயம் பொடி - 1 ஸ்பூன்

பூண்டு பல் - 6

தேங்காய் பால் - 1 கப்

தேங்காய் துருவல் - 4 கப்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை :

முதலில் எடுத்துக்கொண்ட பீர்க்கங்காயினை தோல் நீக்கி சுத்தம் செய்து பின் சிறு துண்டாக நறுக்கி தனி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.தொடர்ந்து எடுத்துக்கொண்ட வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நன்கு சுத்தம் செய்து சிறு துண்டாக நறுக்கிக்கொள்ளவும்.தற்போது குக்கர் ஒன்றில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை 'மிளகாய், வெந்தயம், பச்சை மிளகாய், உப்பு, போதுமான அளவு தண்ணீர் சேர்த்து 4 விசில் வர வேக வைத்து இறக்கவும்.குக்கர் விசில் அடங்கியதும் இச்சேர்மங்களை நன்கு மசித்துக்கொள்ளவும். பின் இதனுடன் தேங்காய் பால், தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்துவிடவும்.தற்போது இந்த குழம்புக்கு தாளிப்பு கொடுக்க கடாய் ஒன்றில் சிறிதளவு எண்ணெயுடன் கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம், கடலை பருப்பு, பெருங்காய பொடி சேர்த்து தாளிக்கவும். பின் இந்த தாளிப்பினை தயாராக உள்ள பீர்க்கங்காய் பால் குழம்பில் சேர்த்து கலந்துவிட சுவையான பீர்க்கங்காய் பால் குழம்பு தயார்.

Tags

Next Story