புரூட்+அவல் மிக்ஸ் பாயாசம்

புரூட்+அவல் மிக்ஸ் பாயாசம்
X

புரூட்+அவல் மிக்ஸ் பாயாசம்

புரூட்+அவல் மிக்ஸ் பாயாசம் (ஐந்து நபர்களுக்கு)

தேவையான பொருட்கள்:

ஏதேனும் ஒருவகை அவல் - 500 கிராம்

கனிந்த வாழைப்பழம் - 15

பழுத்த அன்னாசிப்பழம்

உலர் திராட்சை - 100 கிராம்

பேரீட்சை - 250 கிராம்

முந்திரிப்பருப்பு - 100 கிராம்

ஏலம்தூள் - சிறிது

நாட்டு வெல்லம்தூள் - 1 கிலோ

திராட்சை - 200 கிராம்

மாதுளை - 2

தேங்காய் துருவல் - 6 மூடிகள்

தயாரிப்பு முறை:-

ஏதேனும் ஒருவகை அவலை கல்நீக்கி சுத்தம் செய்து நீரில் கழுவி வடிகட்டி ஊற விடவும்.

வெட்டவும். பழுத்த அன்னாசிப்பழத்தை தோல்சீவி சிறிதாக கனிந்த வாழைப்பழங்களைத் தோல் நீக்கி வட்டமாக வெட்டவும். உலர் திராட்சை, பேரீட்சையைக் கழுவி கொட்டை க்கவும். திராட்சையைக் கழுவவும். மாதுளையை தோல்நீக்கி முத்துக்களை எடுக்கவும்.

ஊறிய அவலை மிக்ஸியில் அரைக்கவும். வெட்டிய அன்னாசிப் பழங்களை மிக்ஸியில் அரைத்து சாறு எடுக்கவும். தேங்காய் துருவலில் சிறிது நீர்விட்டு மிக்ஸியில் அரைத்து பிழியாமல் அப்படியே அரைத்த அவலுடன் கலக்கவும். அதனுடன் அன்னாசிப் பழச்சாறு, வெட்டிய வாழைப் பழங்கள், முந்திரி, திராட்சை, மாதுளை முத்துக்கள், நாட்டு வெல்லம்தூள், பேரீட்சை, உலர் திராட்சை, ஏலம்தூள் சேர்த்துக் கலக்கவும். இது ஓர் அருமையான இயற்கை பாயாசம். அவல்+புரூட் மிக்ஸ் பாயாசம் நீரிழிவு அன்பர்கள் தவிர அனைவரும் ஜோராகச் சாப்பிடலாம். பள்ளிச் சிறுவர்கள் மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள் இயற்கை நலவாழ்வு முகாம்களில் மிகவும் விரும்பப்படும் இயற்கை பாயாசம். -நேச்சுரல் பாயாசம். பப்பாளி, சாத்துக்குடி, மாம்பழங்களும்- கலக்கலாம்.

Tags

Next Story