கனேடியன் வெஜிடபின் சூப்

கனேடியன் வெஜிடபின் சூப்
X

கனேடியன் வெஜிடபின் சூப்

கனேடியன் வெஜிடபின் சூப்

தேவையான பொருட்கள்:

மக்காச்சோளம் 2 கப்

தக்காளி 2 கப்

சிவப்பு குடைமிளகாய் 1

பச்சைநிற குடைமிளகாய் 1

வெங்காயம் 2 பற்கள்

பூண்டு

பேசில் இலைகள் 1 கப்

சாலட் குரூட்டான்ஸ் 1/2

துருவிய மொஸரல்லா சீஸ்

மிளகுத்தூள் 1 டீஸ்பூன்

செய்முறை:

வெங்காயம் பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

குடைமிளகாய்களை சுத்தம் செய்து வெங்காயத்தின் அளவாகவே நறுக்கி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தக்காளி, மக்காச்சோளம் சேர்த்து நன்கு கலக்கவும்.

பிறகு சீஸும், குரூட்டான்சும் தவிர எல்லாப் பொருட் களையும் சேர்த்து கலக்கி அடுப்பில் வைக்கவும்.

கலவை கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது அனலை குறைத்து வைத்து மூடிபோட்டு வேகவிடவும்.

அரைமணி நேரத்தில் எல்லா காய்களும் வெந்து தயாராகியிருக்கும்.

இதை அவனில் வைக்ககூடிய சிறிய அளவான நான்கு கோப்பைகளில் ஊற்றி முதலில் குரூட்டான்களை போட்டு அதன் மேலாக சீஸை தூவி விடவும்.

இவ்வாறு நான்கு கோப்பையையும் தயார் செய்து 400 டிகிரியில் சூடான அவனில் வைத்து சீஸ் உருகும் வரை வைத்திருந்து வெளியில் ரோல்ஸ்சுடன் சூடாக பரிமாறவும். எடுத்து டின்னர்

Tags

Next Story