உடலுக்கு குளிர்ச்சியான சீரகம் சட்னி !!

உடலுக்கு குளிர்ச்சியான சீரகம் சட்னி !!
X

சீரகம் சட்னி

தேவையான பொருட்கள் :

சீரகம் - கால் கப்

இஞ்சி - சிறிய துண்டு

சின்ன வெங்காயம் - 5

புளி - எலுமிச்சை சைஸ்

வர மிளகாய் - 5

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை :

முதலில் அடுப்பில் கடாயை வைக்கவும். அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.

எண்ணெய் காய்ந்ததும் கால் கப் சீரகத்தை கடாயில் சேர்க்க வேண்டும்.

அடுத்து, துருவிய இஞ்சி மற்றும் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்க வேண்டும்.

பிறகு, புளி மற்றும் வர மிளகாயை சேர்த்து வதக்கிவிட்டு ஆறவைக்க வேண்டும்.

கலவை ஆறியதும் மிக்ஸி ஜாருக்கு மாற்றி தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்தால் துவையல் ரெடியாகிவிடும்.

மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளித்துவிட்டு, அரைத்த கலவையில் சேர்த்து தாளித்து கொள்ளலாம்.

Tags

Next Story