ருசியான தேங்காய் பால் ரசம் !!

ருசியான தேங்காய் பால் ரசம் !!
X

தேங்காய் பால் ரசம்

தேவையான பொருட்கள்

தேங்காய் பால்

மிளகு, சீரகம்

பச்சை மிளகாய்

பூண்டு

கறிவேப்பிலை

எண்ணெய்

கடுகு

உளுத்தம் பருப்பு

வரமிளகாய்

தக்காளி

மஞ்சள் தூள்

உப்பு

பெருங்காயத்தூள்

புளி கரைசல்

கொத்தமல்லி தழை


செய்முறை :

ஒரு மிக்சி ஜாரில் மிளகு, சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு அதில் நாம் எடுத்து வைத்துள்ள தோலுரித்த பூண்டு பற்களையும் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்.

அடுத்து அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும். சூடான பிறகு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் வரமிளகாயை கிள்ளி போட்டு தாளித்து கொள்ளுங்கள். அதன் பிறகு அதில் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வேக விடுங்கள்.

தக்காளி மிகவும் மென்மையாக வெந்த பிறகு அதில் மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து கிளறி விடுங்கள். அதற்கு அடுத்து நாம் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து தாளித்து புளி கரைசல் ஊற்றி கலந்து விடுங்கள்.

கொத்தமல்லி தழைகளை தூவி இவை அனைத்தும் ஒரு சேர்ந்து கொதி வந்ததும் அதில் நாம் எடுத்து வைத்துள்ள தேங்காய் பாலை ஊற்றவும். ஒரு கொதி வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைத்தால் தேங்காய் பால் ரசம் தயார்.

Tags

Next Story