மட்டன் கீமா பாவ் பாஜி ரெசிபி !!

மட்டன் கீமா பாவ் பாஜி ரெசிபி !!
X

Mutton Keema Pav Bhaji Recipe

தேவையான பொருட்கள் :


* ஆட்டிறைச்சி

* இஞ்சி விழுது

* பூண்டு விழுது

*வெங்காயம்

*தக்காளி

*பட்டாணி

*கேப்சிகம்

* கரம் மசாலா தூள்

*மிளகாய் தூள்

*மஞ்சள் தூள்

* எண்ணெய்

* உப்பு

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா சேர்த்து வெங்காயத்துடன் நன்கு வதக்க வேண்டும்.பின்பு இத்துடன் கீமா சேர்த்து தண்ணீர் வற்றும்வரை நன்கு வதக்க வேண்டும். அதன்பின் மிளகாய் தூள், பட்டாணி, தக்காளி ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.பின்பு கேப்சிகம் சேர்த்து ஒரு கிளறு கிளற வேண்டும். மேலும் சிறிது உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கீமா கெட்டியாகும் வரை 10-15 நிமிடங்கள் நன்கு வேகவிட வேண்டும். பின்பு கொத்தமல்லி இலைகளைத் தூவி விட்டால் நமக்கு சுவையான மட்டன் கீமா பாவ் பாஜி ரெடி.

Tags

Next Story