ஸ்வீட் ஆன தேங்காய் போளி !!
Sweet
தேவையான பொருட்கள் :
அனைத்து நோக்கம் கொண்ட மாவு - 3/4 கப்
ரவை - 2 தேக்கரண்டி
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் - 1/2 கப்
நெய் - 1/4 கப்
தண்ணீர் - தேவையான அளவு
பச்சை ஏலக்காய் - 1
செய்முறை :
ஒரு கிண்ணத்தில் மைதாவையும் ஒரு சிட்டிகை உப்பையும் சேர்த்து நல்லா கலந்துக்கோங்க. இப்போ அதில் எண்ணையையும் சேர்த்து நல்லா கலந்து விடுங்க. இப்போ அதில் தேவையான தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். மாவு ரெடியானதும் 2 முதல் 3 மணி நெரத்திற்கு அதை அப்படியே மூடி வைத்து ஊறவிட வேண்டும்.
ஒரு கிண்ணத்தில் பொடித்த கொப்பரை தேங்காயும் ஏலக்காய் பொடியும் சேர்த்து எல்லா பொருட்களையும் ஒண்ணா கலந்து வைத்து கொள்ள வேண்டும். இப்போ அதில் கொஞ்சம் நெய் சேர்த்து கலந்து வெச்சுக்கோங்க. நல்ல பேஸ்ட் பதத்தில் வேண்டுமென்றால் நீங்கள் இதில் கொஞ்சம் பாலையும் சேர்த்துக்கலாம்.
ஏற்கனவே பிசைந்து வைத்த மைதா மாவை எடுத்து சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி, தேங்காய் உருண்டைகளையும் சின்ன உருண்டைகளாக செய்து அதை மைதா உருண்டைகளுக்கு நடுவில் வெச்சு தேங்காய் பூரணம் வெளியே வராதபடி எல்லா பக்கங்களிலும் மாவினால் நல்லா மூடி தட்டையான வடிவத்தில் செய்து கொள்ள வேண்டும்.
போளியை ஒரு எண்ணெய் உறிஞ்சும் ஷீட்டில் வைத்து இருப்பக்கங்களிலும் கொஞ்சம் எண்ணெய் தடவிக்கொண்டு சப்பாத்தி வடிவத்தில் தேய்ச்சுக்கோங்க.
அடுப்பில் ஒரு தவாவை வைத்து அதில் கொஞ்சம் நெய் சேர்த்துக்கோங்க. பொன்னிறமாக வேகும் வரை இரண்டு பக்கமும் திருப்பி போட்டு எடுத்தால் சுடச்சுட போளி தயார்.