கிராமத்து ஸ்டைல் சுருள் போளி !!
X
சுருள் போளி
தேவையான பொருட்கள் :
1.மைதா
2.பால்
3.பொட்டுக்கடலை
4.ஏலக்காய்த்தூள்
5.சர்க்கரை
6.உப்பு
7.எண்ணெய்
சுருள் போளி செய்முறை :
மைதா மாவை உப்பு, பால், சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பின்பு பொட்டுக்கடலை, ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும். பிசைந்த மைதா மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போல் தேய்த்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, பூரி பொரிக்கும் பதத்தில் எண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொரு பூரியாக பொரித்து எடுக்கவும். சூடாக பொரித்த பூரியின் மேல் அரைத்து வைத்துள்ள பொடியை தூவினால் சுவையான சுருள் போளி தயார்.
Next Story