மாத்திரை போடாமல் தலைவலியை குறைக்க 5 டிப்ஸ் !!

மாத்திரை போடாமல் தலைவலியை குறைக்க 5 டிப்ஸ் !!
X

தலைவலி

தலைவலிக்கு பல காரணங்கள் உண்டு. மன அழுத்தம், பதட்டம், தூக்கமின்மை, முறையற்ற உணவு, அதிகப்படியான மது அருந்துதல், கண் சோர்வு, உயர் இரத்த அழுத்தம், ஒற்றைத்தலைவலி, சைனஸ், ஜலதோஷம், புகைப்பிடித்தல் மற்றும் மாசுபாடு போன்றவை காரணமாக இருக்கலாம்.

*தலைவலி இருக்கும் போது எந்த வேலை செய்தாலும் தாமதிக்காமல் முதலில் ஓய்வு எடுக்க செல்லுங்கள். அதிக நேரம் இல்லையென்றாலும் 1- 2 மணி நேரம் வெளிச்சம் இல்லாத படுக்கயறையில் படுத்து எழுவது வலியை குறைக்க செய்யும். ஓய்வாக இருக்கிறோமே என்று மொபைல் சாதனங்களை பயன்படுத்தாமல் கண்களை மூடி அமைதியாக ஓய்வெடுங்கள். வலி குறையும்.

*உச்சந்தலையில் அழுத்தத்தை கொடுப்பது வலியை கட்டுப்படுத்த செய்யும். கூந்தலை இறுக்கி கட்டி இருந்தால் அது தலைவலியை அதிகரிக்கலாம். கை விரல்களால் உச்சந்தலையில் நெற்றியின் மேல் என அழுத்தம் கொடுத்து விடுவது வலியை குறைக்கும்.

*தலைவலி இருக்கும் போது சூயிங்கம் போன்று மெல்லும் உணவு பொருளை தவிருங்கள். கடினமான மெல்ல கூடிய உணவுகளை தவிருங்கள். இதனால் தாடை பகுதியில் வலி, கன்னங்களின் உட்புறம் வலி, உதடுகள் அசைவால் கூட வலி உண்டாகி தலைவலி உணர்வை அதிகரிக்கும். மென்மையான உணவுகளை எடுத்துகொள்வது வலியை கட்டுப்படுத்த உதவும்.

*மசாஜ் செய்யும் போது வலிக்கு இதமான உணர்வை அளிக்கும். தாங்க முடியாத வலி இருக்கும் போது மசாஜ் செய்வது வலி உபாதையை குறைக்கும். உங்கள் நெற்றி , கழுத்து பொன்ற இடங்களில் மசாஜ் செய்வது மன அழுத்தத்தின் காரணமாக ஏற்படும் டென்ஷன் தலைவலியை கட்டுப்படுத்த செய்யும். அத்தியாவசிய எண்ணெய் கொண்டு புருவங்கள் நெற்றிபகுதியை மசாஜ் செய்யவும். இரத்த ஓட்டத்தை மேம்படுத்த இவை உதவும். புதினா எண்ணெய், துளசி எண்ணெய், லாவெண்டர் எண்ணெய் பயன்படுத்தவும்.

*நீரேற்றமாக இருப்பது தலைவலியை கட்டுப்படுத்த செய்யும். மூலிகை பானங்கள் வலி நிவாரணியாகவும் இருக்கும். இஞ்சி பானங்கள் தலைவலிக்கு சிறந்த தீர்வாக இருக்கும். இரத்த நாளங்களின் வீக்கத்தை குறைக்க இவை உதவும். இது தலைவலியை கட்டுப்படுத்த செய்கிறது. இஞ்சி தேநிர் குடிக்கலாம். இது குமட்டலை குறைக்கிறது.

Tags

Next Story