மனிதர்களின் நோய் தடுக்கும் ஆற்றலை குறைக்கும் கோழிக்கறி

மனிதர்களின் நோய் தடுக்கும் ஆற்றலை குறைக்கும் கோழிக்கறி
X

கோழிக்கறி

சிக்கன் என்று அழைக்கப்படும் கோழிக்கறி பெரும்பாலும் பிராய்லர் கோழிகளில் இருந்து பெறப்படும் கறியை குறிக்கிறது.கடந்த 20 ஆண்டுகளில் இந்த பிராய்லர் சிக்கன் பெருமளவில் இந்தியாவை ஆக்கிரமித்துள்ளது.

இது நல்லதா, கெட்டதா என்ற விவாதங்கள் தொடர்ந்து நடந்து வந்தன. இது குறித்த ஆய்வு சமீபத்தில் இந்தியா முழுவதும் நடத்தப்பட்டது ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கோழிக்கறியில் 40 சதவீத மாதிரிகளில் அளவுக்கு அதிகமான ஆன்டிபயாடிக் மருந்துகள் இருப்பது தெரிய வந்துள்ளது. கோழிகளின் எடை கூடுவதற்கும், அவை வேகமாக வளர்வதற்கும் இந்த மருந்துகளை அதிகம் தருகின்றனர். இது தவறான அணுகுமுறை என்கிறது. ஆய்வுக்குழு. இதற் காக கோழிகளின் ஈரல், தசை, சிறுநீரகம் என்று தனித்தனியாக பிரித்து பரிசோதனை செய்யப்பட்டன.

கோழி வளர்ப்பில் ஆறு விதமான ஆன்டிபயாடிக் மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆக்சிடெட்ராசைக்ளின், குளோர்டெட்ராசைக்ளின், டெட்ராசைக்ளின், என்ரோபிளோக்சசின், சிப்ரோபிளோக்சின், நியாமைசின் ஆகிய மருந்துகள் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு கிலோ கோழிக்கறியில் 3.37 மற்றும் 131.75 மைக்ரோ கிராம் ஆன்டிபயாடிக் மருந்துகளின் பதிவுகள் இருப்பது தெரியவந்துள்ளது.

கோழிகளின் வாழ்நாளில் 35 முதல் 42 நாட்க ளுக்குள் ஆன்டிபயாடிக் மருந்துகள் காரணமில்லாமல் ஏராளமான அளவில் வெறும் எடையை அதிகரிக்கவும் வளர்ச்சியை வேகப்படுத்து வதற்கும் மட்டுமே தரப்படுகின்றன. மேலும், இந்த ஆய்வு ஒரு சிறு அளவை மட்டுமே காண்பித்துள்ளது. இன்னும் அதிகமான ஆன்டிபயாடிக் மருந்துகள் முறையற்றுப் பயன்படுத்தப்படுகின்றன என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இப்படி அதிக அளவில் ஆன்டிபயாடிக் கலந்து இருக்கும் கோழிக்கறியை சாப்பிடுவதால் மனிதர்களின் நோய் தடுக்கும் ஆற்றலும் குறைந்துவிடுகிறது.

மேலும் 2002ல் இருந்து 2013ம் ஆண்டு வரை மருத்துவமனைகளில் மேற்கொண்ட ஆய்வுகளின்படி பெரும்பாலான நோயாளிகளுக்கு சிப்ரோ பிளோக்சின், ஆக்சிடெட்ராசைக்ளின், டெட்ரா சைக்ளின் போன்ற ஆன்டிபயாடிக் மருந்துகள் வேலை செய்யாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்துகள் மனித உடல் முழுவதும் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் ஏற்ற மருந்தாகும். இவை வேலை செய்யாமல் போகும் போது டைபாய்டு போன்ற பல கிருமித் தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது பெரும் சவாலாக உள்ளது.

ஆக, கோழிக்கறி சிறந்த உணவுதான். அதில் தேவையின்றி செலுத்தப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகள் தான் தீமைகளை ஏற்படுத்துகின்றன. எனவே கோழிக்கறி உற்பத்தியில் தாறுமாறாக ஆன்டிபயாடிக் பயன்படுத்துவதை தடுக்க சட்டம் கொண்டுவர வேண்டும் என்று ஆய்வு நடத்திய அமைப்பு தெரிவித்துள்ளது.

Tags

Next Story