உணவு கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் சர்க்கரை நோயாளிகளுக்கு அவசியம்

உணவு கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் சர்க்கரை நோயாளிகளுக்கு அவசியம்
X

உணவு கட்டுப்பாடு

சர்க்கரை நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு முறையான பரிசோதனைகளால் உறுதி செய்யப் பட்டால் அந்த உண்மையை தயங்காமல் ஏற்று கொள்ளுங்கள். '"எனக்கு சர்க்கரை நோய் இருக்காது என்று நீங்களாகவே முடிவு செய்து சிகிச்சையை மறுக்கவோ அல்லது நிறுத்தவோ செய்யாதீர்கள்."

அதனால் பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும். சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரே விதமான உணவு அல்லது உயர, எடை, செய்யும் வேலை. உடனிருக்கும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு சத்து இவற்றிற்கேற்ப உணவு மாறுபடும். உணவு கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் சர்க்கரை நோயாளிகளுக்கு அவசியம். இவை இல்லாமல் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை இல்லவே இல்லை. ஒருமுறை ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சரியாக இருந்தால் வேண்டாம். உடனே சிகிச்சையை நிறுத்த

மறுபரிசோதனை சர்க்கரை நோய் சிகிச்சையின் மிக முக்கியமான அம்சமாகும். கண்கள், இதயம், சிறுநீரகங்கள் மற்றும் பாதங்களில் பாதிப்பு இருக்கிறதா என்று அவ்வப்போது பார்த்து கொண்டால் சர்க்கரை நோயின் சுனாமி தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை தொடர்ந்து கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால் நோய் தொற்று ஏற்படும் போது சிரமங்களும், செலவும் அதிகரிக்கும். வேறு ஒரு சர்க்கரை நோயாளியின் நிலைமையை ஒப்பிட்டு குழப்பத்திற்கு ஆளாகாதீர்கள்.

சர்க்கரை நோய் ஒரு குறைபாடும் அல்ல, ஒரு ஊனமும் அல்ல. உலகின் மிகப்பெரிய சாதனை யாளர்கள் பலருக்கும் சர்க்கரை நோய் இருந்தது உண்டு. இப்போதும் உள்ளது. தவறான கருத்துகள், தகவல்கள், விளம்பரங்களால் குழம்பாதீர்கள். உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை உங்களது மருத்துவரிடம் இருந்தே கேட்டு தெரிந்து கொள்ளு ங்கள். இளமையில் சர்க்கரை நோய் அதிகரித்து வருவதால்,வளரும் குழந்தை பருவத்தில் இருந்தே நோய் தாக்காமல் இருப்பதற்கான வழிமுறைகளை தெரிந்து கொண்டு வளரும் குழந்தைகளை சர்க்கரை நோயில் இருந்து காப்பாற்றுங்கள்.

Tags

Next Story