கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பூசணி விதை !!
Pumpkin seed
கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பல கூந்தல் பராமரிப்பு பொருட்கள் இருந்தாலும் குறிப்பாக நீங்கள் இந்த பூசணி விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கூந்தலுக்கு பயன்படுத்தும் போது பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. முடி வளர்ச்சியை ஊக்குவிக்க கூடிய பண்புகள் நிறைந்துள்ளன.
பூசணி விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணையை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் முடி உதிர்வு, பொடுகு பிரச்சனைகள் போன்றவை சரியாக்கப்படும் என கூறப்படுகிறது. பூசணி விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயை தினசரி உணவில் பயன்படுத்துவதன் மூலம் கூந்தல் உதிர்வு தடுக்கப்படுகிறது. மேலும் நமது உடல் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்திற்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நமக்கு கிடைக்கிறது. இந்த எண்ணெயில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் முடி வலுவாகவும் அடர்த்தியாகவும் வளருவதற்கு ஏதுவாக உள்ளது.
மென்மையான மற்றும் பளபளப்பான கூந்தல் வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களது உணவுகளில் இந்த பூசணி எண்ணெயை பயன்படுத்தலாம். பூசணியில் உள்ள லினோலிக் என்ற அமிலம் கூந்தலில் பளபளப்பு தன்மையை தக்க வைக்க உதவுகிறது. ஆலிவ் எண்ணெயில் நிறைந்துள்ள அதே தன்மை இந்த எண்ணெயிலும் உள்ளது.
உணவில் மட்டுமல்லாது நேரடியாகவும் பூசணி எண்ணெய்யை தலையில் பயன்படுத்தலாம். இது கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் கூந்தலில் ஈரப்பதத்தை தக்க வைத்து கூந்தல் வறட்சி ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. நமது கூந்தலில் அழுக்குகள் தூசிகள் படியாமல் இருப்பதற்கு அல்லது அழுக்குகள் மற்றும் தூசிகளால் பாதிப்புகள் ஏற்படாமல் இருப்பதற்கு நீங்கள் இந்த எண்ணெயை பயன்படுத்தலாம்.
சிலருக்கு கூந்தலில் பிளவுகள் இருக்கலாம். குறிப்பாக கூந்தல் நுனிகளில் முடி பிளந்து காணப்படுகிறது. இதற்கு காரணம் கூந்தல் ஆரோக்கியமாக இல்லை என்பதே ஆகும். கூந்தலின் நுனி ஓரங்களில் அதிகமாக பிளவுகள் இருந்தால் முடி பராமரிப்பு முறைகளை சரியாக பராமரிக்க வேண்டும். பூசணி விதையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் முடி இது போன்ற பாதிக்கப்படாமல் தடுக்க உதவுகிறது.
பூசணி விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கூந்தலுக்கு நிறம் மாற்றத்தை கொடுக்கிறது. இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் கூந்தல் பாதிப்பை தடுத்து நிற மாற்றத்தை கொடுக்கிறது.இயற்கையாக நிறமாற்றம் செய்தது போன்ற தோற்றத்தை தருகிறது. மேலும் பெரும்பாலான ஹேர் கலர் ப்ராடக்டுகளில் இது பயன்படுத்தப்படுகிறது. மேலும் நமது கூந்தல் வலுவாவதற்கும் உதவுகிறது.
பூசணி விதையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெயை நேரடியாக கூந்தலில் பயன்படுத்தலாம். தரமான மற்றும் இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் பூசணி விதை எண்ணெய்யை வாங்கிக் கொள்ளுங்கள். முடியை சுத்தமாக ஷாம்பு போட்டு கழுவி உலர்த்திய பிறகு இந்த எண்ணெயை நேரடியாக கூந்தலில் பயன்படுத்தலாம். ஈரமாக இருக்கும் போது எண்ணெய் தடவுவதை தவிர்க்கவும். உச்சந்தலை முதல் நுனி வரை அனைத்து இடங்களிலும் எண்ணெய் படுமாறு மசாஜ் செய்யவும். தினசரி தலைமுடியை பின்னி போடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். முதல் நாள் இரவு நீங்கள் தலைக்கு எண்ணெய் வைத்து மறுநாள் காலையில் குளித்துக் கொள்ளலாம்.