தொடர் இருமலைக் குணப்படுத்த உதவும் சில எளிய மருத்துவக் குறிப்புகள் | king news 24x7

தொடர் இருமலைக் குணப்படுத்த உதவும் சில எளிய மருத்துவக் குறிப்புகள் | king news 24x7
X

 மருத்துவக் குறிப்புகள்

மழைக்­கா­லம் தொடங்­கி­விட்­டது. சாதா­ரண சளிக் காய்ச்­சல் மட்­டு­மன்றி சில­ருக்கு தும்­மல், இரு­மல் போன்ற அறி­கு­றி­களும் தொல்லை தரும். மருத்­து­வ­ரி­டம் சோதித்து மருந்­து­களை எடுத்த பிற­கும் சில நேரங்­களில் வறட்டு இரு­மல் நாள்­கணக்­கில் தொடர்ந்து வாட்­டக்­கூ­டும். இதற்­குத் தீர்வுகாண உதவும் சில எளிய குறிப்­பு­கள்:

சுக்கு, பால் மிளகு, திப்­பிலி, ஏலக்­காய் ஆகி­ய­வற்றை வறுத்­துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்­பிட தொண்டை கர­க­ரப்பு, இரு­மல் ஆகி­யவை குண­மா­கும்.

மிள­கைத் தூள் செய்து, சம அளவு பனை­வெல்­லம் கலந்து, சுண்­டைக்­காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்­பிட, சூட்­டி­னால் உண்­டா­கும் இரு­மல் குண­மா­கும்.

எலு­மிச்­சைப் பழச்­சாற்­று­டன் தேன் கலந்து குடித்­தால் வறட்டு இரு­மல் குண­மா­கும். இர­வில் மிளகு, மஞ்­சள் தூள் கலந்த பாலை அருந்தி வந்­தால் சளி­யும் இரு­ம­லும் பறந்­தோடி விடும். இத­னைக் குறைந்­தது ஒரு வாரத்­திற்­குப் பயன்­ப­டுத்­தி­னால்­தான் பலன் தெரி­யும்.

மாது­ளம் பழத்­து­டன் பாதாம் எண்­ணெய் சேர்த்து சாப்­பிட்­டால் இரு­மல் குறை­யும்.துள­சிப்பூ, திப்­பிலி, வசம்­புப் பொடி இவற்­று­டன் சர்க்­கரை அல்­லது சிறிது தேன் கலந்து சாப்­பிட்­டால் இரு­மல் குறை­யும். பாலு­டன் கிராம்­புப் பொடி­யும் பனங்­கற்­கண்­டும் சேர்த்­துக் காய்ச்சி அருந்தி வந்­தால் வறட்டு இரு­மல் குறை­யும்.

தேனு­டன் சம அளவு இஞ்­சிச் சாறு கலந்து அருந்­தி­னால் இரு­மல், தொண்டை வலி, மார்­புச் சளி, மூக்கு ஒழு­கு­தல், மூக்­க­டைப்பு போன்ற உபா­தை­களில் இருந்து நிவா­ர­ணம் கிடைக்­கும். சீர­கத்­தை­யும் கற்­கண்­டை­யும் மென்று தின்­றால் இரு­மல் குண­மா­கும். நான்கு மிள­கை­யும் இரு கிராம்­பை­யும் நெய்­யில் வறுத்­துப் பொடி செய்து ஒரு வெற்­றி­லை­யில் மடித்து மென்று விழுங்­கி­னால் இரு­மல் குண­மா­கும்.

Tags

Next Story