பொடுகு மற்றும் முடி உதிர்வை போக்க சூப்பர் வீட்டு வைத்தியம் ! | health tips | king news 24x7 |

dandruff
இன்றைய காலக்கட்டத்தில் கூந்தலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பல வகையான பொருட்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த பொருட்கள் நம் தலைமுடியில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. சிறந்த தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்புகளைப் பயன்படுத்தினாலும், முடி பிரச்சனைகளுக்கு முடிவே இல்லை. முடி பிரச்சனைகளை சமாளிக்க புதிய தயாரிப்புகளை பயன்படுத்துவதில் நீங்கள் சோர்வாக இருந்தால், சில எளிய வீட்டு வைத்தியங்களின் உதவியை நீங்கள் பெறலாம்.
*உங்களுக்கு பொடுகு பிரச்னை இருந்தால், யூகலிப்டஸ் எண்ணெய் தடவுங்கள். யூகலிப்டஸ் எண்ணெய் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது பொடுகு மற்றும் உச்சந்தலை அரிப்பை நீக்கும். யூகலிப்டஸ் எண்ணெயை தேங்காய் அல்லது பாதாம் எண்ணெயுடன் கலந்து தடவுவது இன்னும் சிறப்பாக அமையும்.
* எலுமிச்சை சாறை தயிருடன் சேர்த்து தலையில் தடவ வேண்டும். இதனை சிறிது நேரம் ஊற வைத்த பின் முடியை அலசினால், பொடுகு தொல்லை நீங்கும்.
* ரோஸ்மேரி எண்ணெயை தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயுடன் கலந்து தலையில் தடவடும். இதில் உள்ள அலெற்சி எதிர்ப்பு பண்புகள் உங்கள் முடியை உதிராமல் தடுக்கும்.
* செம்பருத்தி பூவை கடுகு எண்ணெயுடன் சூடாக்கி, தலையில் மசாஜ் செய்யவும். இது தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடி வளர்ச்சிக்கு ஊக்குவிக்கிறது.