பாஜகவின் ஊதுகுழலாக பவன் கல்யாண் செயல்படுகிறார்: மாணிக்கம் தாகூர் எம்.பி
X
Manickam Tagore
பாஜகவின் ஊதுகுழலாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் செயல்படுகிறார் என மாணிக்கம் தாகூர் எம்.பி விமர்சித்துள்ளார். மேலும் பேசிய அவர், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், திருப்பதி வெங்கடாசலபதி கோயில் உண்டியல் பணம் மீதே கடந்த ஆட்சியில் கைவைக்கப்பட்டிருப்பதாக கூறுவது ஏற்கமுடியாது. அவர், பாஜக-வின் ஊதுகோலாக செயல்படுகிறார். பாஜக செய்ய நினைப்பதை பவன் கல்யாண் சொல்கிறார். மக்களுக்கு நலனுக்கு எதிரான மத அரசியல் கையிலெடுக்கிறார். இது ஆந்திர மக்களுக்கு அவர் செய்யும் துரோகம் என்றார்.
Next Story