தீபாவளி பரிசு: எந்தெந்த பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரியே கிடையாது?

தீபாவளி பரிசு: எந்தெந்த பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரியே கிடையாது?
X

nirmala sitharaman

ஜிஎஸ்டியில் செய்யப்பட்ட புதிய மாற்றங்களால் சில பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஜிஎஸ்டியில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, கீழ்கண்ட பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரியே கிடையாது:-

  • அல்ட்ரா ஹை டெம்ப்ரேட்சர் பால்
  • சென்னா, பன்னீர்
  • பீட்சா ரொட்டி
  • காக்ரா, சப்பாத்தி, ரொட்டி
  • பரோட்டா உள்ளிட்ட இந்திய ரொட்டி வகைகள்
  • அகல்சிடேஸ் பீட்டா, இமிக்ளூசரேஸ், எப்டாகாக் ஆல்ஃபா செயல்படுத்தப்பட்ட மறுசீரமைப்பு உறைதல் காரணி VIIa ஆகிய மருந்துகள்
  • Onasemnogene abeparvovec, Asciminib, Mepolizumab, Pegylated Liposomal Irinotecan, Daratumumab, Daratumumab subcutaneous, Teclistamab, Amivantamab, Alectinib, Risdiplam, Obinutuzumab, Polatituzumab, Entituzumab Spesolimab, Velaglucerase Alpha, Agalsidase Alfa, Rurioctocog Alpha Pegol, Idursulphatase, Alglucosidase Alfa, Laronidase, Olipudase Alfa, Tepotinib உள்ளிட்ட மருந்துகள்

எரேசர், பயிற்சி புத்தகம், வரைபட புத்தகம், ஆய்வக குறிப்பேடுகள் மற்றும் குறிப்பேடுகளுக்குப் பயன்படுத்தப்படும் பூசப்படாத காகிதம் மற்றும் காகிதப் பலகை, மேப், ஹைட்ரோகிராபிக் போன்ற பிற பொருட்கள், உலக வரைபட பந்து, பென்சில், ஷார்ப்னர்ஸ், க்ரையான்ஸ், ட்ராயிங் சார்கோல்ஸ், ரைட்டிங், ட்ராயிங் சாக், தனிநபர் மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடு ஆகியவற்றின் மீது இதுநாள் வரை விதிக்கப்பட்ட வரி அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் செப்டம்பார் 22ம் தேதி முதல், மேற்குறிப்பிடப்பட்ட பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி ஏதும் விதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவற்றின் விலை கணிசமாக குறைய உள்ளது. குறிப்பாக உணவு, கல்வி மற்றும் மருத்துவம் சார்ந்த பல பொருட்கள் மீதான வரி குறைவது, அவற்றின் அணுகலை மக்களுக்கு எளிதாக்கியுள்ளது. இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரும் பலன் அடைவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

Next Story