குட் நியூஸ்..! சினிமா டிக்கெட் கட்டணங்கள் அதிரடி குறைப்பு!!

குட் நியூஸ்..! சினிமா டிக்கெட் கட்டணங்கள் அதிரடி குறைப்பு!!
X

movie theatre

கர்நாடக மாநிலத்தில் மல்டிபிளக்ஸ் உள்பட அனைத்து திரையரங்குகளிலும் டிக்கெட் கட்டணம் 200 ரூபாய் தான் என அறிவித்த்துள்ளது.

கர்நாடக மாநில அரசு மிக முக்கியமான ஒரு விஷயத்தை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது. இதன்படி கர்நாடக மாநிலத்தில் மல்டிபிளக்ஸ் உள்பட அனைத்து திரையரங்குகளிலும் டிக்கெட் கட்டணம் 200 ரூபாய் தான் என அறிவித்த்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு உட்பட அனைத்து பகுதிகளிலும் மல்டிபிளக்ஸ் உள்ளிட்ட அனைத்து திரையரங்குகளிலும் இனி சினிமாவிற்கான டிக்கெட் கட்டணம் 200 ரூபாய் தான். இத்துடன் வரிகள் சேர்த்து வசூல் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 75 இருக்கைகள் மற்றும் அதற்கும் குறைவாக இருக்கைகளை கொண்ட மல்டி ஸ்க்ரீன் தியேட்டர்கள் பிரீமியம் வசதிகள் தரும் தியேட்டர்களுக்கு இந்த 200 ரூபாய் டிக்கெட் கட்டணம் என்பது பொருந்தாது , அவர்கள் அந்த வசதிகளுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கர்நாடக மாநில அரசு இதற்காக கர்நாடக சினிமா கட்டுப்பாடு விதிமுறைகளில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. இதன் மூலம் கர்நாடக மாநிலத்தில் மல்டிபிளக்ஸ் சென்று திரைப்படம் பார்ப்பதற்கான செலவுகள் இனி கணிசமான அளவு குறையும் . நல்ல ஆடம்பர வசதி கொண்ட சினிமா தியேட்டர்களுக்கு இந்த 200 ரூபாய் டிக்கெட் கட்டணம் பொருந்தாது எனவே ஆடம்பர வசதிகள் வேண்டும் என்பார்கள் அதிக கட்டணம் கொடுத்து சினிமா பார்த்துக் கொள்ளலாம் .ஆனால் மல்டிபிளக்ஸ் உள்ளிட்ட அனைத்து திரையரங்குகளிலும் 200 ரூபாய் கட்டணம் மற்றும் அதற்கான வரியை மட்டுமே வசூல் செய்ய முடியும்.

Next Story