துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!!

X
dulquer salmaan
நடிகர் துல்கர் சல்மானுக்கு சொந்தமான சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (அக்.08) காலை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நடிகர் துல்கர் சல்மானுக்கு சொந்தமான சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (அக்.08) காலை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அவருக்கு சொந்தமான திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திலும் 6 அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை அபிராமிபுரத்தில் நடிகர் துல்கர் சல்மானின் வீடு உள்ளது. இந்த வீட்டிற்கு இன்று காலை 2 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சட்ட விரோதமாக பூடானில் இருந்து சொகுசு கார்கள் இறக்குமதி செய்த புகாரில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
Next Story
