இறுதி வாக்காளர் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு!!

Voter id
பீகார் மாநிலத்தை தொடர்ந்து நாடு முழுவதும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான முன் தயாரிப்பு பணிகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மாநிலங்கள் இதற்கு முன்பாக நடைபெற்ற தீவிர வாக்காளர் திருத்த பணிகள் மேற்கொண்டு வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை இணையதளத்தில் வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இதன்படி, தமிழ்நாட்டில் 2002 மற்றும் 2005ம் ஆண்டுகளில் மேற்கொள்ளபட்ட தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கு பிறகு வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதளமான https://www.elections.tn.gov.in/ElectoralRolls.aspx என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை மேற்கொள்வதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
